ஆப்நகரம்

ஒரே இரவில் தகர்க்கப்பட்ட மேம்பாலம்; சீன தொழிலாளர்கள் சாதனை

சீனாவில் ஒரே இரவில் ஏராளமான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, 500 மீட்டர் நீளம் உள்ள மேம்பாலத்தை தகர்த்து, இருந்த சுவடே தெரியாமல் மாற்றி, சர்வதேச கட்டுமான நிபுணர்களை வியக்க வைத்துள்ளனர்.

TNN 3 Sep 2016, 8:13 pm
சீனாவில் ஒரே இரவில் ஏராளமான தொழிலாளர்கள் ஒன்றிணைந்து, 500 மீட்டர் நீளம் உள்ள மேம்பாலத்தை தகர்த்து, இருந்த சுவடே தெரியாமல் மாற்றி, சர்வதேச கட்டுமான நிபுணர்களை வியக்க வைத்துள்ளனர்.
Samayam Tamil sixty eight workers demolish a flyover in china overnight
ஒரே இரவில் தகர்க்கப்பட்ட மேம்பாலம்; சீன தொழிலாளர்கள் சாதனை


அந்நாட்டின் தெற்கே உள்ள நஞ்சாங் என்ற நகரில் கடந்த 24 ஆண்டுகளுக்கும் மேலாக, 500 மீட்டர் நீளத்தில் அமைக்கப்பட்ட மேம்பாலம் போக்குவரத்துக்காக பயன்படுத்தப்பட்டு வந்தது. இந்நிலையில், அந்த மேம்பாலத்தை இடித்துவிட்டு, அப்பகுதியில் சாலை விரிவாக்கப் பணிகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டது.

இதையடுத்து, விரிவான திட்டம் போடப்பட்டது. சர்வதேச கட்டுமான நிபுணர்களே வாயடைத்துப் போகும் வகையில், துல்லியமான செயல்திட்டம் ஏற்படுத்தப்பட்டது. முடிவாக, ஒரு இரவு நேரத்தில், 69 ராட்சத பொக்லைன் இயந்திரங்களை கொண்டுவந்து, அந்த மேம்பாலம் சுற்றிவளைக்கப்பட்டது. அடுத்த சில மணிநேரங்களிலேயே, அதனை தகர்த்தும் விட்டனர்.

அடுத்த நாள் காலையில், அங்கு மேம்பாலம் இருந்த அடையாளமே இல்லை. வெறும் குப்பைகளைப் போன்ற இடிபாடுகள் மட்டும் காணப்பட்டதைப் பார்த்து, பொதுமக்கள் வியந்து போயினர். இதுதொடர்பான, வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக தற்போது பரவிவருகிறது.



சீனர்களைப் பொறுத்தவரை இது சாதாரண பணிகளில் ஒன்றாகும். அவர்கள் நினைத்தால், 6 நாளில் ஓட்டல் கட்ட முடியும். 19 நாட்களில், 57 அடுக்குகள் கொண்ட அடுக்குமாடிக் கட்டிடத்தை நிறுவ முடியும். ஒரேநாளில், மேம்பாலம் போட முடியும். இப்படியாக பல முடியும்களை, தங்களது அயராத, நேர்த்தியான, ஒற்றுமையான உழைப்பின் மூலம் சாத்தியப்படுத்தி வருகின்றனர் சீன தொழிலாளர்கள்…

அடுத்த செய்தி