ஆப்நகரம்

செல்போன் வெடித்து பிரபல கம்பெனி சிஇஓ பலி

மலேசியாவில் பிரபல நிதிநிறுவனத்தின் சிஇஓ செல்போன் வெடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 21 Jun 2018, 5:05 pm
மலேசியாவில் பிரபல நிதிநிறுவனத்தின் சிஇஓ செல்போன் வெடித்து பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Nazrin-haasan


மலேசிய முதலீட்டு மூலதன நிதியகத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக பணிபுரிந்து வருபவர் நாஸ்ரின் ஹசன். இவர் பிளாக்பெர்ரி, ஹவேய் ஸ்மார்ட்போன்களை பயன்படுத்தி வந்தார்.

இந்நிலையில், நேற்று நாஸ்ரின் தனது இரண்டு மொபைல்களையும் படுக்கை அறையில் சார்ஜ் போட்டு விட்டு படுத்து தூங்கினார். அப்போது அதில் ஒரு மொபைல் போன் அதிகமாக சூடு ஏறி, வெடித்து சிதறி தீப்பற்றியது. இந்த தீ அவர் அறை முழுவதுமாக பற்றி எரியத் தொடங்கியது. இந்த விபத்தில் செல்போன் வெடித்து அவரது தலையில் பட்டு உயிரழந்தார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார், தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அடுத்த செய்தி