ஆப்நகரம்

ஒரு மனுஷனுக்கு இப்படியெல்லாமா சோதனை வரும்?...எதை சாப்பிட்டாலும் "பீர்" ஆக மாறிய கொடுமை!!

அமெரிக்காவின் நியூயார்க் நகரைச் சேர்ந்த வாலிபர் ஒருவருக்கு, அவர் எதை உட்கொண்டாலும் வயிற்றில் அது பீராக மாறிவிடும் வினோதமான பிரச்சனை இருந்து வந்தது தற்போது தெரிய வந்துள்ளது.

Samayam Tamil 25 Oct 2019, 11:26 pm
நியூயார்க் நகரைச் சேர்ந்த 46 வயதான வாலிபர் ஒருவர், கடந்த 2014 -ஆம் ஆண்டு, ஒரு நாள் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.
Samayam Tamil smbs


அப்போது, அந்த நகரின் போக்குவரத்து போலீஸார், அந்த வாலிபர் மது அருந்தி இருக்கிறாரா? என சோதனை செய்தனர்.

அதில், அனுமதிக்கப்பட்ட அளவைவிட 5 மடங்கு மது அருந்தியுள்ளதாக சோதனை முடிவுகள் காட்டின. இதையடுத்து அவர் மீது குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக (ட்ரங்க் அண்ட் டிரைவ்) போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.

தான் ஒருபோதும் மது அருந்துவதில்லை என அந்த வாலிபர் தொடர்ந்து சொல்லி வந்தாலும், அவரது பேச்சை போக்குவரத்து போலீசாரோ, அவரது உறவினர்களோ நம்ப தயாராக இல்லை.

இப்படியே மூன்றாண்டுகள் உருண்டோட, அந்த நபரின் பிரச்சனை குறித்து 2017 -ஆம் ஆண்டு, நியூயார்க்கில் உள்ள ரிச்மண்ட் பல்கலைக்கழகத்துக்கு தெரிய வந்தது.

புதியதாக உருவாகும் பெருங்கடல்; இரண்டு கண்டங்களாக பிளக்கும் ஆப்ரிக்கா..!

அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் தான், அவருக்கு வினோதமான நோய் இருப்பது தெரிய வந்தது.

அதாவது, மதுபானம் தயாரிக்கும் நிறுவனங்கள், பீர் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்களில் உள்ள கார்போஹைட்ரேட் மூலக்கூறுகளை ஆல்கஹாலாக மாற்ற, ஒருவகை பூஞ்சாணை (fungus) பயன்படுத்துவது வழக்கம்.

அத்தகைய பூஞ்சை, இந்த வாலிபரின் வயிற்றில் இருப்பது மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்தது. இதன் காரணமே, அவர் எந்த உணவை உட்கொண்டாலும், அதனை வயிற்றுக்குள் உள்ள பூஞ்சைகள் நொதிக்க செய்து. ஆல்கஹாலாக (பீர்) மாற்றிவிடுகின்றன என்பதும் உறுதியானது.

தானாக பற்றி எரியும் பச்சை மரம்... வைரலாகும் வீடியோ!!

2011 -ஆம் ஆண்டு, கை எலும்பு முறிவின்போது அவர் எடுத்துக் கொண்ட நோய் எதிர்ப்பு மருந்து, மாத்திரைகளின் எதிர்விளைவாக, அவரது வயிற்றில் பூஞ்சைகள் உருவாகியிருக்கலாம் என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்பின், பிச்மண்ட் பல்கலைக்கழகத்தின் மருத்துவத் துறையினர் அளித்த தொடர்ச்சி சிகிச்சையின் பயனாக. தமக்கு இருந்து வந்த வினோத நோயிலிருந்து அந்த வாலிபர் தற்போது விடுப்பட்டுள்ளார் என ரிச்மண்ட் பல்கலைக்கழக பேராசிரியர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி