ஆப்நகரம்

தென் கொரியாவில் கொரோனா பாதிப்பு திடீர் உயர்வு

நீண்ட நாட்களுக்குப் பிறகு தென் கொரியாவில் ஒரேநாளில் அதிக அளவில் புதிய நோயாளிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.

Samayam Tamil 27 May 2020, 8:06 pm

ஹைலைட்ஸ்:

  • ஏப்ரல் 8ஆம் தேதி 53 புதிய கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
  • சென்ற வாரம் முதல் உயர்நிலை வகுப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன.
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Virus Outbreak South Korea
தென் கொரியாவில் புதன்கிழமை 40 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
தென் கொரியாவின் கொரோனா வைரஸ் தொற்றுநோயின் தாக்கம் குறைந்ததைத் தொடர்ந்து, அங்கு படிப்படியாக இயல்பு வாழ்க்கை திரும்பிக்கொண்டிருக்கிறது.

முதல் கட்டமாக சென்ற புதன்கிழமை உயர்நிலை வகுப்புகள் மீண்டும் செயல்படத் தொடங்கியுள்ளன. அடுத்தடுத்த வாரங்களில் பிற வகுப்புகளுக்கும் மாணவர்கள் திரும்புவார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில், புதன்கிழமை அந்த நாட்டில் புதிதாக 40 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் அந்நாட்டில் கொரோனா பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கை 11,265 ஆகக் கூடியிருக்கிறது.

நீண்ட நாட்களுக்குப் பிறகு தென் கொரியாவில் ஒரேநாளில் இந்த அளவுக்கு புதிய நோயாளிகள் அறிவிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஏப்ரல் 8ஆம் தேதி 53 புதிய கொரோனா நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

சீனாவின் வெளிப்படைத் தன்மைக்கு WHO பாராட்டு!

அடுத்த செய்தி