ஆப்நகரம்

இலங்கை தற்கொலைப் படை தாக்குதல்: முதலாமாண்டு நினைவஞ்சலி...

கடந்தாண்டு கொழும்புவில் உள்ள மூன்று தேவாலயங்களில் நடந்த தற்கொலைப் படை தாக்குதலில் பலியானவர்களுக்கு இன்று இரண்டு நிமிட அஞ்சலி செலுத்தப்பட்டது.

Samayam Tamil 21 Apr 2020, 2:13 pm
கொழும்புவில் உள்ள மூன்று தேவாலயங்களில் கடந்தாண்டு ஈஸ்டர் நாளில் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தப்பட்டது.
Samayam Tamil இலங்கை


இந்தத் தாக்குதலில் 279 பேர் கொல்லப்பட்டனர். 600 பேருக்கும் மேற்பட்டோர் கை, கால்களை இழந்தனர். இறந்தவர்களை இன்று நினைவுகூறும் வகையில் தேவாலயங்களில் ஐந்து நிமிடம் பெல் இசைக்கப்பட்டது. நாடு முழுவதும் இன்று காலை 8.45 மணிக்கு இரண்டு நிமிடங்கள் மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது. தொலைக்கட்சிகள் ஒளிபரப்பும் நிறுத்தப்பட்டது. இந்த நேரத்தில்தான் கடந்தாண்டு தற்கொலைப் படை தாக்கப்பட்டது.

தற்கொலைப் படைத் தாக்குதலில் தப்பித்தவர்கள் இன்று அந்தத் தாக்குதலுக்கு உள்ளான செயின்ட் செபாஸ்டியன் தேவாலயத்திற்கு வெளியே நின்று பிரார்த்தனையில் ஈடுபட்டனர். இதேபோல், செயின்ட் ஆன்டனி தேவாலயம் வெளியேவும் சிலர் கூடி மெழுகுவர்த்தி ஏற்றினர். இந்த தேவாலயம் குண்டுவெடிப்பில் 56 பேர் பலியாகி இருந்தனர்.

கிம் ஜாங் உன் பற்றி எங்களுக்கு ஒண்ணும் தெரியாது: தென் கொரியா

கடந்தாண்டு இஸ்லாமிய தீவிரவாதிகள் ஏழு பேர் இலங்கையின் தேவாலயங்களுக்குள் நுழைந்து தற்கொலைப் படை தாக்குதலை மேற்கொண்டு இருந்தனர்.

பிரான்ஸ் கொரோனா பலி 20 ஆயிரத்தை எட்டியது
அமெரிக்காவில் கொரோனாவுக்கு 42 ஆயிரம் பேர் சாவு

இந்த தாக்குதல் முடிந்து மூன்று வாரங்கள் கழித்து அந்த நாட்டில் இரண்டு மதத்தினர் இடையே வன்முறை வெடித்தது. ஒருவர் கொல்லப்பட்டு, பலரது வீடுகளுக்கும், கடைகளுக்கும் தீ வைத்து எரிக்கப்பட்டது. இந்த வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர அந்த நாட்டு அரசு எமர்ஜென்சியை அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி