ஆப்நகரம்

முடிவுக்கு வந்த ஊரடங்கு; ஆனால் அதுல தான் ஒரு சிக்கல்; செம உஷாரான அரசு!

மூன்று நாட்கள் ஊரடங்கு இன்றுடன் முடிவடைந்த நிலையில் பொதுமக்கள் வெளியில் வர புதிய வகை கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Samayam Tamil 17 May 2021, 4:56 pm

ஹைலைட்ஸ்:

  • இலங்கையில் இன்றுடன் முடிவுக்கு வந்த மூன்று நாட்கள் ஊரடங்கு
  • பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என எச்சரிக்கை
  • தேசிய அடையாள அட்டை எண்ணிற்கு ஏற்ப கடைகளுக்கு செல்லலாம்
ஹைலைட்ஸ் படிக்க - டவுண்லோட் ஆப்
Samayam Tamil Sri Lanka Lockdown
இலங்கையில் நாள்தோறும் 2,000 பேருக்கு மேல் கொரோனா வைரஸ் பாதிப்பு கண்டறியப்பட்டு வருகிறது. தற்போது 21 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சூழலில் இலங்கை நாட்டில் கொரோனாவின் மூன்றாவது அலை தொடங்கியிருப்பதாக அஞ்சப்படுகிறது. இதையொட்டி மூன்று நாட்கள் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது.
இன்றுடன் ஊரடங்கு முடிவடைந்த நிலையில் அடுத்த ஒருவாரத்திற்கு பொதுமக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதுதொடர்பாக காவல்துறை செய்தித் தொடர்பாளர் ஒருவர் பேசுகையில், அத்தியாவசிய பணிகளின் இயக்கத்திற்காக மட்டுமே ஊரடங்கு முடிவுக்கு வந்துள்ளது. பொதுமக்கள் தங்களின் தேசிய அடையாள அட்டை -யில் இருக்கும் கடைசி எண்ணிற்கு ஏற்ப அத்தியாவசிய சேவைகளுக்கு வெளியில் வரலாம்.

இது சரிப்பட்டு வராது; கட்டுப்பாடுகளில் புது ட்விஸ்ட் கொடுத்த அரசு!
அதாவது ஒற்றைப்படை எண் இருந்தால் ஒற்றைப்படை நாட்களிலும், இரட்டைப்படை எண் இருந்தால் இரட்டைப்படை நாட்களிலும் வெளியில் செல்லலாம். அரசு மற்றும் தனியார் அலுவலகங்களில் குறைந்தபட்ச ஊழியர்களைக் கொண்டே செயல்படலாம். வாகனங்களின் இயக்கம் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணி வரை தடை செய்யப்பட்டுள்ளது.

என்னையும் கைது செய்யுங்கள்: மோடி போஸ்டர் விவகாரம் குறித்து ஓவியா சவால்
இந்த இரவுநேர பயணக் கட்டுப்பாடுகள் மட்டும் இம்மாத இறுதி வரை நீடிக்கும். டாக்ஸிகள், மூன்று சக்கர வாகனங்களில் அதிகபட்சமாக இருவர் மட்டுமே பயணிக்கலாம். டூரிசம் பப்புள் சிஸ்டம் மூலமாக சுற்றுலா பயணிகளை கையாள வேண்டும். அவர்கள் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை பின்பற்றுவதை உறுதி செய்ய வேண்டும் என்று தெரிவித்தார்.

நிலைமை சரியில்லை; வரும் ஞாயிறு முதல் தீவிரமடையும் கட்டுப்பாடுகள்!
கடந்த வாரம் இலங்கை சுற்றுலா மேம்பாட்டு ஆணையத்தின் பொது இயக்குநர் தம்மிகா விஜேசிங்கா வெளியிட்ட உத்தரவில், வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் பயோசேஃப்டி பப்புள் சிஸ்டம் மூலம் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை பின்பற்றி பயணிக்கலாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி