ஆப்நகரம்

போர்க்குற்றங்களில் இருந்து விடுபட டிரம்ப் உதவியை நாடும் இலங்கை!

போர்க்குற்றம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் இருந்து விடுபடுவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உதவியைப் பெறும் முயற்சிகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.

TNN 28 Nov 2016, 8:00 am
போர்க்குற்றம் தொடர்பான விசாரணை நடவடிக்கைகளில் இருந்து விடுபடுவதற்காக, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் உதவியைப் பெறும் முயற்சிகளில் இலங்கை அரசு ஈடுபட்டுள்ளது.
Samayam Tamil sri lanka seeks donald trumps help to drop war crimes charges
போர்க்குற்றங்களில் இருந்து விடுபட டிரம்ப் உதவியை நாடும் இலங்கை!


கடந்த 2009ம் ஆண்டு மே மாதத்தில் நடைபெற்ற இறுதிக்கட்ட ஈழப் போரின்போது, ஏறக்குறைய 50 ஆயிரத்திற்கும் அதிகமான தமிழ் மக்களை, இலங்கை படையினர் கொன்று குவித்தனர். இதுதொடர்பாக, ஐ.நா., சபையின் மனித உரிமைகள் ஆணையம் விசாரணை நடத்திவருகிறது.

குறிப்பாக, இந்த விசாரணையை தீவிரப்படுத்த, அமெரிக்கா தொடர்ந்து அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால், சர்வதேச அரங்கில் இலங்கைக்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இத்தகைய சூழலில், தற்போது அமெரிக்காவின் புதிய அதிபராக, டொனால்டு டிரம்ப் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

அவருக்கு பிரத்யேக வாழ்த்துச் செய்தி ஒன்றை, இலங்கை அரசு அனுப்பியுள்ளது. இதனை அந்நாட்டு அதிபர் மைத்ரிபால சிறிசேனா உறுதிப்படுத்தியுள்ளார்.

அவர் கூறுகையில், ‘’ஐ.நா., மனித உரிமைகள் ஆணையத்தில் இலங்கை மீது விசாரணை மற்றும் கண்டன தீர்மானம் எதுவும் நிறைவேற்றப்பட்டால், அதனை நிராகரிக்க உதவும்படி அமெரிக்க அதிபரிடம் கோரியுள்ளோம். சர்வதேச அரங்கில் இலங்கை மீது ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடியை சமாளிக்க அவர் உதவுவார் என நம்புகிறோம்,’’ என்றார்.

English Summary:

Sri Lanka's President Maithripala Sirisena has asked Donald Trump to pressure the UN Human Rights Council to drop war crimes allegations against the country's troops.

அடுத்த செய்தி