ஆப்நகரம்

பட்ஜெட் பத்தல... நாய்களுக்கு பதில் இலங்கை ராணுவத்தில் வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க கீரிகள்

வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க நாய்களுக்கு பதிலாக, கீரிகளை பயன்படுத்த பயிற்சி அளித்து வருகின்றது இலங்கை ராணுவம்.

Samayam Tamil 19 Aug 2018, 7:56 am
கொழும்பு : வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க நாய்களுக்கு பதிலாக, கீரிகளை பயன்படுத்த பயிற்சி அளித்து வருகின்றது இலங்கை ராணுவம்.
Samayam Tamil marten


சில நாடுகளில் நாய்களுக்கு பதிலாக எலி, பன்றி போன்றவற்றை வெடிகுண்டு கண்டுபிடிக்க பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில் கடந்த 2 ஆண்டுகளாக வெடி குண்டுகளை கண்டுபிடிக்கும் பயிற்சியை கீரிப் பிள்ளைகளுக்கு இலங்கை ராணுவம் அளித்து வருகின்றது.

இதுகுறித்து மேஜர் சுபுன்ஹேரத் கூறியதாவது :

வெடிகுண்டுகளை கண்டுபிடிக்க பயன்படுத்தும் பெரும்பாலான நாய்கள் வெளிநாட்டிலிருந்து தான் வாங்கப்படுகின்றன. அங்கு குளிர் சீதோஷன நிலையில் வளரும் அவைகளை, இங்கு பராமரிப்பது சிரமமான வேலை. அதோடு அவற்றிக்கு வழங்கப்படும் உணவும் அதிக செலவை வைக்கிறது.

அதே சமயம் கீரிகளுக்கு அவ்வளவு செலவும், பராமரிப்பும் தேவையில்லை. ஆனால் நாய்களை விட மிக அதிக மோப்பச்சக்தி வாய்ந்தது கீரிகள். நாய்கள் தன் தலைக்கு கீழ் உள்ள வெடிகுண்டுகளை தான் கண்டுபிடிக்க முடியும். ஆனால் கீரிகள் அப்படி இல்லை தன் தலைக்கு மேல் உயரமான இடத்தில் குண்டுகள் வைக்கப்பட்டிருந்தாலும் அவற்றை கண்டுபிடிக்கும் ஆற்றலுடன் உள்ளது. நாங்கள் வெடிகுண்டு கண்டுபிடிக்கும் சோதனை பயிற்சியில் ஈடுபட்ட போது, வெடிகுண்டுகளை கண்டுபிடித்து, அது இருக்கும் இடத்திற்கு மேல் அசையாமல் அமர்ந்துகொண்டு நமக்கு தகவலை கொடுக்கின்றது.

இதுவரை இலங்கை ராணுவத்தில் 7 கீரிகளுக்கு பயிற்ச்சி அளிக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் 2 பயிற்சியை முடித்து ராணுவத்தில் பணியாற்றி வருகின்றது.
இலங்கையில் 3 வீதமான கீரிகள் உள்ளன. அதில் சாம் பல் நிற கீரி நன்றாக மோப்பம் பிடிக்கிறது.

அடுத்த செய்தி