ஆப்நகரம்

இலங்கையில் பள்ளிகள் திறப்பு, ஆனால் தேர்தல் மட்டும் இப்போ கிடையாது!

இலங்கையில் பாராளுமன்றத் தேர்தலை இப்போது நடத்தப்போவதில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

Samayam Tamil 11 Jun 2020, 11:00 am
இலங்கையில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஆயிரத்து 869ஆக உள்ளது. இதுவரை அந்நாட்டில் வைரஸ் தொற்று காரணமாக 11பேர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil இலங்கையில் பள்ளிகள் திறப்பு, ஆனால் தேர்தல் மட்டும் இப்போ கிடையாது!
இலங்கையில் பள்ளிகள் திறப்பு, ஆனால் தேர்தல் மட்டும் இப்போ கிடையாது!


ஆயிரத்து 122பேர் தொற்றிலிருந்து மீண்டுள்ள நிலையில் 736 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர் என அந்நாடு அறிவித்துள்ளது.

இந்த சூழலில் இலங்கை பாராளுமன்றத் தேர்தல் விரைவில் நடக்கும் என மக்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால், இப்போது தேர்தல் நடத்தப்படாது என்றும் ஆகஸ்ட் 5ஆம் தேதிதான் தேர்தல் நடத்தப்படும் என்றும் இலங்கையின் தேர்தல் ஆணையம் அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

இந்தியா-சீனா எல்லை பிரச்சினை: பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்... விரைவில் தீர்வு?

அதே நேரத்தில் இலங்கை ஊரடங்கு கிடுக்கிப்பிடிகளை படிப்படியாகத் தளர்த்த முடிவு செய்துள்ளது. இரவு நேரங்களில் மட்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் இருக்கும் என அறிவித்துள்ள இலங்கை அரசு இந்த மாத இறுதியில் பள்ளிகளைத் திறக்க அனுமதி வழங்கியுள்ளது.

அதேபோல் சுற்றுலாப் பயணிகளை ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் அனுமதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது. இதுபோன்ற தளர்வுகளை அறிவித்துவிட்டு பாராளுமன்றத் தேர்தலை 3 மாதம் ஒத்தி வைத்தது பெரும் சர்ச்சையை இலங்கையில் கிளப்பியுள்ளது.

அடுத்த செய்தி