ஆப்நகரம்

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வருகை!

இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.

TNN 25 Apr 2017, 9:36 pm
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே 4 நாள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார்.
Samayam Tamil sri lankan pm ranil wickremesinghe arrives india on four day visit
இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே இந்தியா வருகை!


தனி விமானத்தில் டெல்லி வந்தடைந்த ரணில், நாளை பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்துப் பேசுகிறார். அப்போது, முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள், மீனவர் நலன் விவகாரம் பற்றியும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ராஜஸ்தான் உள்ளிட்ட சில இடங்களில் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அவர் பங்கேற்க உள்ளார்.

வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனா, நேபாளம் அதிபர் பித்யாதேவி பண்டாரி ஆகியோர் சமீபத்தில் இந்தியா வந்துசென்றனர். இவர்களை தொடர்ந்து தற்போது ரணில் விக்கிரமசிங்கே இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். பிரதமர் நரேந்திர மோடி அடுத்த மாதம் 12ம் தேதி இலங்கை செல்ல உள்ளதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

India: Sri Lankan PM Ranil Wickremesinghe arrives New Delhi on four-day visit.

அடுத்த செய்தி