ஆப்நகரம்

இலங்கை பாதுகாப்புத் துறைச் செயலர் ஹேமசிறி பெர்னாண்டோ ராஜினாமா!

தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தை தடுப்பதில் நிகழ்ந்த அலட்சியத்தை அடுத்து, இலங்கை பாதுகாப்புச் செயலர் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

Samayam Tamil 25 Apr 2019, 6:22 pm
இலங்கையில் ஈஸ்டர் திருநாளில் பல்வேறு இடங்களில் தீவிரவாத தாக்குதல் நடந்தது. 8 இடங்களில் நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதல்களில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 500க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Samayam Tamil hemasiri fernando


இது உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இரண்டு நாட்களுக்கு பிறகு, இலங்கை குண்டுவெடிப்பு சம்பவத்திற்கு ஐ.எஸ் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுள்ளதாக “அமாக்” செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இந்த தாக்குதல் குறித்து, உளவுத்துறை எச்சரித்தும், அரசு தரப்பில் அலட்சியம் காட்டப்பட்டதாக கூறப்படுகிறது. எனவே பாதுகாப்பு செயலர் உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் பதவி விலக வேண்டும் என்று அதிபர் சிறிசேனா வலியுறுத்தி இருந்தார்.

இந்நிலையில் இலங்கை பாதுகாப்புத் துறை செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், இலங்கை தொடர் குண்டுவெடிப்பு சம்பவத்தில், பாதுகாப்பு குறைபாடுகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படும்.

இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த சூழலில் தனது பதவியை ராஜினாமா செய்வதாக பாதுகாப்புத் துறை செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி