ஆப்நகரம்

சொந்த நாட்டிற்கு திரும்ப மறுப்பு: இந்தோனேசியாவில் இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்

தஞ்சக் கோரிக்கை விடுத்த 350க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள், இந்தோனேசியாவின் தற்காலிக அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர்.

TNN 4 Mar 2017, 11:32 pm
தஞ்சக் கோரிக்கை விடுத்த 350க்கும் மேற்பட்ட இலங்கை தமிழ் அகதிகள், இந்தோனேசியாவின் தற்காலிக அகதி முகாம்களில் வசித்து வருகின்றனர். இந்நிலையில் மெடன் பகுதியில் உள்ள அகதி முகாம்களில் வசிக்கும் நான்கு குடும்பத்தினர் கடந்த ஐந்து நாட்களுக்கு மேலாக உண்ணாவிரதம் இருந்து வந்துள்ளனர். அவர்களின் உடல்நிலை மோசமடைந்ததை அடுத்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மூன்றாம் தரப்பு நாடுகளில் குடியமர்த்தப்படுவதாக உறுதியளிக்கப்பட்ட நிலையிலும், கடந்த எட்டு ஆண்டுகளுக்கு மேலாக இலங்கை தமிழ் அகதிகள் முகாம்களிலேயே வைக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
Samayam Tamil srilankan refugees started hunger strike in australian camps
சொந்த நாட்டிற்கு திரும்ப மறுப்பு: இந்தோனேசியாவில் இலங்கை அகதிகள் உண்ணாவிரதம்


இலங்கையில் தொடர்ந்து சித்ரவதைகளும் பாலியல் வன்முறைகளும் நிகழ்வதாக ஐக்கிய நாடுகள் சபை மீண்டும் தெரிவித்துள்ள நிலையில், இந்தோனேசியாவில் உள்ள தமிழ் அகதிகள் இலங்கைக்கே திருப்பி அனுப்பப்படுவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் நடவடிக்கையாக அமையக்கூடும்.

Srilankan Refugees started hunger strike in Australian Camps.

அடுத்த செய்தி