ஆப்நகரம்

ரஷ்ய குண்டுவெடிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 14-ஆக உயர்வு

ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.

TNN 4 Apr 2017, 3:05 pm
மாஸ்கோ: ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரில் நிகழ்ந்த குண்டு வெடிப்பு சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது.
Samayam Tamil stpetersburg blast death toll rises to 14
ரஷ்ய குண்டுவெடிப்பு: உயிரிழப்பு எண்ணிக்கை 14-ஆக உயர்வு


ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் நகரின் சென்னயா லோஸ்சத் மற்றும் அருகிலுள்ள டெக்னாலஜி இன்ஸ்டிட்யூட் ஆகிய இரண்டு மெட்ரோ ரயில் நிலையங்களில் நேற்று மாலை குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில், சிக்கி சுமார் 10 பேர் உயிரிழந்தனர் என தெரிவிக்கப்பட்டிருந்தது. மேலும், படுகாயமடைந்த ஏராளமானோர், மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி சிலர் உயிரிழந்ததால், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14-ஆக உயர்ந்துள்ளது. இந்த தகவலை அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சர் உறுதிபடுத்தியுள்ளார். மேலும், மருத்துவமனையில் 49 பேர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதனிடையே, ரஷ்ய குடியுரிமை பெற்ற கிர்கிஸ்தான் வம்சாவளியை சேர்ந்தவர் இந்த தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அந்நாட்டு பாதுகாப்பு அதிகாரிகள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். முன்னதாக, குண்டு வெடிப்பு நிகழ்ந்த இடத்தில் அந்நாட்டு அதிபர் புடின் அஞ்சலி செலுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
#StPetersburg blast: Death toll rises to 14

அடுத்த செய்தி