ஆப்நகரம்

பெரு நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு

தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 6.1 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

TNN 10 Sep 2016, 7:32 pm
தென் அமெரிக்காவில் உள்ள பெரு நாட்டின் வடக்குப் பகுதியில் இன்று காலை பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவில் இது 6.1 ஆக பதிவாகியுள்ளது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil strong 6 0 quake shakes northern peru
பெரு நாட்டில் பயங்கர நிலநடுக்கம்: ரிக்டரில் 6.1 ஆக பதிவு

மொயாம்பா நகரின் வடக்கே சுமார் 50 கிமீ தொலைவில் பூமிக்கடியில் 114 கிமீ ஆழத்தில் இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நகரில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர்.

இந்த சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் மக்களுக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளதா என்பது குறித்த தகவல் ஏதும் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி