ஆப்நகரம்

ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு

ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

TNN 22 Nov 2016, 9:41 am
டோக்கியோ: ஜப்பான் நாட்டில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, அங்கு சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
Samayam Tamil strong quake hits northeastern japan tsunami warning issued
ஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை விடுப்பு


ஜப்பானின் வடகிழக்கு பகுதியில் புகுஷிமா அணு உலை அருகே அந்நாட்டு நேரப்படி சுமார் 6 மணியளவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.4 என பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் ஆழம் சுமார் 25 கி.மீ இருக்கலாம் என கணக்கிடப்பட்டுள்ளது.

#BREAKING Strong quake hits northeastern Japan, tsunami warning issued: NHK — AFP news agency (@AFP) November 21, 2016 சக்திவாய்ந்த இந்த நிலநடுக்கத்தை தொடர்ந்து, புகுஷிமா மற்றும் மியாகி பகுதிகளில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர். மேலும், புகுஷிமா அணு உலையில் ஏதேனும் சேதம் ஏற்பட்டுள்ளதா என்றும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நிலநடுக்கத்தால் சுமார் 5 பேர் லேசான காயமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கடந்த 2011-ஆம் ஆண்டில் ஏற்பட்ட சுனாமியால் புகுஷிமா அணுஉலை பாதிப்புக்குள்ளானது என்பது குறிப்பிடத்தக்கது.
Strong quake hits northeastern Japan, tsunami warning issued

அடுத்த செய்தி