ஆப்நகரம்

கொசுவால் கொரோனா பரவுமா? ஆய்வில் அதிர்ச்சித் தகவல்!

கொசுக்களால் கொரோனா வைரஸ் பரவாது என இத்தாலி நாட்டில் நடத்தப்பட்ட ஆராய்ச்சியில் தெரியவந்துள்ளது.

Samayam Tamil 26 Jun 2020, 6:06 pm
கடந்த டிசம்பர் மாதம் சீனாவில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியது. அதன்பின்னர் ஐரோப்பிய நாடுகள், ஆசிய நாடுகள், அமெரிக்கா, இந்தியா, லத்தீன் அமெரிக்க நாடுகள், ரஷ்யா, ஆப்பிரிக்க நாடுகள் என உலகம் முழுவதும் பரவியுள்ளது.
Samayam Tamil கொசு


ஏறக்குறைய 6 மாதங்களாக உலக நாடுகளை கொரோனா வாட்டி வதைத்து வருகிறது. உலகம் முழுவதும் கொரோனாவால் சுமார் 96.2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்தம் சுமார் 4,90,000 பேர் உயிரிழந்துள்ளனர். இது ஒருபுறமிருக்க, ஊரடங்கால் ஏராளமானோர் வேலைகளை இழந்து, தொழில் பாதிக்கப்பட்டு அவதியுறுகின்றனர்.

கொரோனா பரவலை கட்டுப்படுத்த மாஸ்க், கையுறை போன்றவற்றை அணிந்து ஆறு அடி தனிமனித இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என உலக சுகாதார மையம் அறிவுறுத்தியுள்ளது. பொதுவெளிகளில் கூட்டம் கூடுவதால் கொரோனா அசுர வேகத்தில் பரவ வாய்ப்புகள் அதிகம். இதுபோக வேறு ஏதேனும் வழிகளில் கொரோனா பரவ வாய்ப்புள்ளதா என ஆய்வுகள் நடந்து வருகின்றன.

இந்நிலையில், கொசுக்களின் வாயிலாக கொரோனா வைரஸ் பரவ வாய்ப்பில்லை என இத்தாலி நாட்டில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது. கொசுக்களால் கொரோனா பரவாது என ஏற்கெனவே உலக சுகாதார மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலையில், கொசுக்களால் கொரோனாவை கடத்த முடியுமா என இத்தாலி நாட்டின் தேசிய சுகாதாரக் கழகம் ஆய்வு நடத்தியது. இந்த ஆய்வு முடிவில், சாதாரண கொசுக்களாலும், புலி கொசுக்களாலும் கொரோனா பரவாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி