ஆப்நகரம்

சர்வாதிகார ஆட்சிக்கு முற்றுப்புள்ளி; சூடானில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம்; மக்கள் எழுச்சிக்கு வெற்றி!

சூடான் நாட்டின் அதிபராக பதவி வகித்து வந்த ஒமர் அல்-பஷீரை, அந்நாட்டு ராணுவம் அகற்றி ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

Samayam Tamil 11 Apr 2019, 7:19 pm
வடகிழக்கு ஆப்பிரிக்காவில் அமைந்துள்ள நாடு சூடான். இங்கு கடந்த 30 ஆண்டுகளாக அதிபர் ஒமர் அல்-பஷீரின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஆப்பிரிக்காவில் நீண்ட காலமாக ஆட்சி செய்து வந்த சர்வாதிகாரியாக ஒமர் அல்-பஷீர் கருதப்படுகிறார்.
Samayam Tamil Sudan President


இவரது ஆட்சியில் பொருளாதார வீழ்ச்சி, உணவு பொருட்கள் விலை உயர்வு, எரிபொருள் பற்றாக்குறை, பணத்தட்டுப்பாடு உள்ளிட்ட பிரச்சனை ஏற்பட்டு வந்தன. இதைக் கண்டித்து பொதுமக்கள் நீண்ட காலமாக போராடி வருகின்றனர்.

இந்நிலையில் அதிபர் ஒமர் அல்-பஷீரை கைது செய்து, அந்நாட்டு ராணுவம் இன்று ஆட்சியை கைப்பற்றியுள்ளது. சூடான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. விரைவில் தேர்தலை சந்திக்க சாதகமான சூழல் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ள ராணுவத் தளபதி அவாத் இம்நவுப், பஷீர் பாதுகாப்பான இடத்தில் வைக்கப்பட்டுள்ளார். ராணுவத்தின் தலைமையில் அடுத்த 2 ஆண்டுகளுக்கு ஆட்சி நடைபெறும்.

மக்கள் பிரதிநிதியாக ராணுவப் படைகள் செயல்படும். அடுத்த 3 மாதங்களுக்கு அவசரக் காலம் பிரகடனம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் தேசிய அளவிலான போராட்ட ஒடுக்கும் மற்றும் 2005 சட்டப்பிரிவு ரத்து செய்யப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி