ஆப்நகரம்

பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டம், மதத்திற்கு எதிரான மோதல் அல்ல- சுஷ்மா உரை

அபுதாபி: பயங்கரவாதத்தை எதிர்த்து ஒன்றாக செயல்பட வேண்டும். பயங்கரவாதம் மதத்தை சீர்குலைக்கும் சக்தியாகவே நாம் பார்க்க வேண்டும். மனிதநேயத்தை காப்பாற்ற வேண்டும்- சுஷ்மா ஸ்வராஜ் உரை

Samayam Tamil 1 Mar 2019, 6:55 pm
மதம் தவறாக வழிநடத்தப்படுவதன் நீட்சியால் பயங்கரவாதம் உருவெப்படுதாக அபுதாபியில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளில் கூட்டத்தில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் தெரிவித்தார்.
Samayam Tamil பயங்கரவாதத்தை வேரறுப்போம்- இஸ்லாமிய நாடுகள் மாநாட்டில் சுஷ்மா ஸ்வராஜ்


இஸ்லாமிய கூட்டுறவு கூட்டமைப்பின் (OIC) கீழுள்ள 57 நாடுகள் பங்கேற்கும் மாநாடு அபுதாபியில் நடைபெற்றது. இதில் கூட்டமைப்பில் இடம்பெற்றுள்ள 57 நாடுகளில் வெளியுறவுத் துறை அமைச்சகர்கள் பங்கேற்றனர்.

இதில் இந்தியா சார்பில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பங்கேற்றார். நிகழ்வில் பேசிய அவர், இந்தியா வளர்ச்சி அடைந்துள்ளதால் இஸ்லாமிய நாடுகளுடன் உறவு வலுவடைந்துள்ளது. இஸ்லாமிய நாடுகளுடன் பொருளாதார உறவுகள் வளர்ச்சி அடைந்துள்ளன.

புல்வாமா தாக்குதலை தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றத்தை அதிகரித்து வரும் உலகளாவிய பயங்கரவாதத்தை எதிர்த்து ஒன்றாக செயல்பட வேண்டும். ஒவ்வொரு மதமும் சமாதானத்தையே வலியுறுத்திகிறது. பயங்கரவாத போராட்டம், எந்த மதத்திற்கு எதிரான மோதல் அல்ல என்று சுஷ்மா ஸ்வராஜ் உரையாற்றினார்.


இஸ்லாமிய நாடுகள் கூட்டமைப்பு மாநாட்டில் சுஷ்மா பங்கேற்பதால், பாகிஸ்தன் இந்த மாநாட்டை புறக்கணிப்பதாக அந்நாட்டு வெளியுறவுத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி