ஆப்நகரம்

ஹேப்பி நியூஸ்: இலவச வைபை வசதி பெற இதை செய்தால் போதும்!

சுவிட்சர்லாந்தை சேர்ந்த இணைய சேவை நிறுவனம் ஒன்று இலவச வைபை வசதி பெற நூதன அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது

Samayam Tamil 19 Oct 2020, 3:40 pm
கொரோனா கால கட்டம் என்பதால் இன்றைய சூழலில் பெரும்பாலானோர் வீட்டில் இருந்தே பணி புரியும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்புகள் எடுக்கப்பட்டு வருகின்றன. இதற்காக இணைய வசதி தேவைப்படுவதால், அனைவரும் தங்களது வீட்டில் இணைய சேவை, வைபை சேவையை கொடுத்து வருகிறார்கள்.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்த நிலையில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த இணைய சேவை நிறுவனமான ட்விஃபி, நூதன அறிவிப்புடன் விளம்பரம் ஒன்றை செய்தது. அதில், தங்களது நிறுவனத்தின் பெயரை புதிதாக பிறந்த குழந்தைக்கு வைத்தால், 18ஆண்டுகளுக்கு இலவச வைபை சேவை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. குழந்தையின் பிறப்பு சான்றிதழை பதிவேற்றம் செய்ய வேண்டும். உரிய சரிபார்ப்பிற்குப் பிறகு இலவச வைபை சேவை வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த விளம்பரத்தா ஈர்க்கப்பட்ட அந்நாட்டு தம்பதி ஒருவர், தங்களது பெண் குழந்தைக்கு அந்நிறுவனத்தின் பெயரை வைக்க முன் வந்துள்ளனர். இதையடுத்து, ட்விஃபியா, ட்விஃபியஸ் ஆகிய இரண்டு பெயர்கள் தரப்பட்டுள்ளது. அதில், ட்விஃபியா என்ற பெயரை பெயர் குறிப்பிட விரும்பாதா அந்த தம்பதி தங்களது குழந்தைக்கு வைத்துள்ளது. இதன்மூலம் அந்த பெண் குழந்தைக்கு 18 ஆண்டுகள் வரை வைபை சேவை இலவசமாக கிடைக்க உள்ளது.

7 மாசத்துக்கு பின் இஸ்லாமியர்கள் ஹேப்பி; அதுவும் மெக்கா கிராண்ட் மசூதியில்...!

இந்த இலவச வைபை சேவை மூலம் மகிழ்ச்சியடைந்துள்ள அக்குழந்தையில் பெற்றோர், இணையத்துக்கு ஆகும் செலவை தங்களது குழந்தையின் சேமிப்பு கணக்கில் வைக்கவுள்ளதாகவும், அதனை வைத்து எதிர்காலத்தில் அக்குழந்தை கார் ஒன்றை ஒன்றை வாங்கலாம் அல்லது வேறு ஏதாவது செலவுக்கு பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி