ஆப்நகரம்

பீச்சுக்கு வரதீங்க: ஊரடங்கை அமல்படுத்த திட்டம்!

ஆஸ்திரேலியத் தலைநகர் சிட்னியின் கொரோனாவின் தாக்கம் மீண்டும் அதிகரித்து வருவதால், அங்கு மீண்டும் ஊரடங்கை அமல்படுத்த அந்நாட்டு அரசு திட்டமிட்டு வருகிறது

Samayam Tamil 20 Dec 2020, 6:59 pm
உலகை அச்சுறுத்தி வரும் கொரோனா காரணமாக தொடர்ந்து அமலில் இருந்து வந்த பொது முடக்கம் பொருளாதார மீட்பு நடவடிக்கைகளின் பேரில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் உலக நாடுகளில் தளர்த்தப்பட்டுள்ளது. அதேசமயம், கொரோனாவின் தாக்கம் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் கொரோனாவின் தாக்கம் அதிகரித்துக் கொண்டே வருகிறது.
Samayam Tamil கோப்புப்படம்
கோப்புப்படம்


அமெரிக்கா, இங்கிலாந்து உள்ளிட்ட சில நாடுகளில் கொரோனாவின் இரண்டாம் அலை வீசத் தொடங்கியுள்ளதால் அங்கு ஊரடங்கு கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், அமெரிக்காவில் உள்ளதை போன்ற கொரோனா வைரசின் வடிவம் பரவுவதால் ஆஸ்திரேலிய தலைநகர் சிட்னியில் கட்டுப்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

சிட்னியில் இரண்டு தினங்களுக்கு முன்னர் 5ஆக இருந்த கொரோனா தொற்று தற்போது 39ஆக அதிகரித்துள்ளது. இதனால், சிட்னியில் இருந்து யாரும் வர வேண்டாம் என்று குயின்ஸ்லாந்து, விக்டோரியா மாகாணங்கள் தெரிவித்துள்ளன. அவ்வாறு வந்தால் 14 நாட்கள் கட்டாயத் தனிமைப்படுதலில் இருக்க வேண்டும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

ஜப்பானில் 7 அடி உயரத்துக்கு வரலாறு காணாத அளவு பனிப்பொழிவு!

சிட்னி நகரில் கொரோனா தொற்று அதிகரிக்கும் என்ற அச்சத்தின் எதிரொலியாக, அங்குள்ள வடக்கு கடற்கரைக்கு வர வேண்டாம் என மக்களுக்கு ஆஸ்திரேலிய அரசு தடை விதித்துள்ளது. கொத்து கொத்தாக கொரோனா பரவுவதை தடுக்க சிட்னியில் அடுத்த 4, 5 நாட்களுக்கு தீவிர ஊரடங்கு அமலில் இருக்கும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது

ஊரடங்கு பகுதிகளில் அத்தியாவசிய காரணங்களை தவிர வேறு காரணங்களுக்காக மக்கள் வெளியே செல்ல அனுமதி இல்லை. நீச்சல் குளங்கள், விளையாட்டு மைதானங்கள், உணவகங்கள் மற்றும் ஹோட்டல்கள் மூடப்பட்டுள்ளன. சிட்னியின் இதர பகுதிகளிலும் ஊரடங்கை அமல்படுத்தலாமா என ஆஸ்திரேலிய அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி