ஆப்நகரம்

மனிதம் உயிர் வாழும் காட்சி; சிதைந்த சிரியாவில், ரமலான் நோன்பு முடித்து மக்கள்...!

சிரியாவில் ரமலான் நோன்பு விரதம் முடித்த தருணத்தின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.

TNN 23 Jun 2017, 5:04 pm
அலெப்போ: சிரியாவில் ரமலான் நோன்பு விரதம் முடித்த தருணத்தின் புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது.
Samayam Tamil syrians breaking their fast amidst ruins
மனிதம் உயிர் வாழும் காட்சி; சிதைந்த சிரியாவில், ரமலான் நோன்பு முடித்து மக்கள்...!


போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா தற்போது நிலைகுலைந்துள்ளது. வீடுகள் தகர்க்கப்பட்டன; மனிதர்கள் கொல்லப்பட்டனர்; உறவினர்கள் தொலைந்து போயினர்; இதயம் நொறுங்கும் காட்சி தான் அங்கே காண முடிகிறது. கடந்த ஆண்டு சிரியாவில் இருந்த வெளியான புகைப்படங்கள், போரின் கோர முகத்தை எடுத்துரைத்தன. 4 வயது சிறுவன் ஆலன் குர்தியின் உடல் கரை ஒதுங்கிய நிகழ்வை யாரும் மறந்திருக்க முடியாது. குண்டு போட்டு தகர்க்கப்பட்ட வீட்டில் இருந்து மீட்கப்பட்ட சிறுவன் ஒம்ரானின் படமும் மனதை காயமாக்கின. இந்நிலையில் ரமலான் நோன்பு முடிந்து, இஃப்தார் விருந்து உண்ணும் காட்சி புகைப்படங்களாக தற்போது வெளியாகியுள்ளன.

இடிந்து கிடக்கும் கட்டடங்களுக்கு இடையே நீண்ட மேஜையில் வரிசையாக அமர்ந்த மக்கள், உண்ணும் காட்சி மனதை வலியையே ஏற்படுத்துகின்றன. டவுமா நகரின் மையப்பகுதியில் அரங்கேறி நிகழ்வு, சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. சிரியாவின் 4 பகுதிகளில் பாதுகாப்பு மையங்கள் ஏற்படுத்தப்படும் என்று சமீபத்தில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, போர் பூமியில் அமைதியாக விரதம் முடிக்கும் நிகழ்வுகள் அரங்கேறியுள்ளது.



These Images Of Syrians Breaking Their Fast Amidst Ruins Have Left The Internet Teary-Eyed.

அடுத்த செய்தி