ஆப்நகரம்

திருக்குறள் சேவைக்காக ஓமனில் தமிழ் சமூகத்தால் கவுரவிக்கப்பட்ட முதல் வடஇந்தியர்!

மஸ்கட்டில் உள்ள தமிழ் சமூகத்தினரால் கவுரவிக்கப்பட்ட முதல் வட இந்தியர் என்ற பெருமையை பாஜகவின் தருண் விஜய் பெற்றுள்ளார்.

Samayam Tamil 10 Feb 2019, 1:43 pm
இமயமலை படர்ந்திருக்கும் மாநிலமான உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் தருண் விஜய். இவர் ஹிந்தி மொழி பேசக்கூடியவர். இவருக்கு தமிழின் பொதுமறையாக கருதப்படும் திருக்குறள் பெயரில் விருது வழங்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Oman sword of Thirukural award to Tharun Vijay


அதாவது, வடஇந்தியா மற்றும் உலகின் பல்வேறு நாடுகளில் திருக்குறளின் பெருமையைக் கொண்டு சென்றதில் முக்கியப் பணியாற்றியுள்ளார். இதன் காரணமாக ஓமன் நாட்டின் மஸ்கட்டில் உள்ள தமிழ்ச் சமூகம் தருண் விஜய்க்கு “திருக்குறளின் போர்வாள்” என்ற விருதை வழங்கிச் சிறப்பித்துள்ளது.

இதற்கான விழா மஸ்கட்டில் உள்ள அல் மாஸா அரங்கில் நடைபெற்றது. இதில் ஓமன் நாட்டின் அரசு பிரதிநிதிகள், பல்வேறு தமிழ் அமைப்பினர் கலந்து கொண்டனர். இந்த விருதை திருக்குறள் அறிவியல் கல்வி நிறுவனத்தின் இயக்குநர் தங்கமணி, தருண் விஜய்க்கு வழங்கி சிறப்பித்தார்.

இதன்மூலம் மஸ்கட்டில் தமிழ் சமூகத்தில் கவுரவிக்கப்படும் முதல் வட இந்தியர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இதையடுத்து திருக்குறளில் மிகச்சிறப்பான செயல்பாடுகள் மேற்கொண்ட ஆசிரியர்கள், மாணவர்கள், தமிழ் அறிஞர்களுக்கு தருண் விஜய் விருதுகள் வழங்கி சிறப்பித்தார்.

இதையடுத்து பேசிய அவர், இந்தியாவைப் புரிந்து கொள்ள அடிப்படையான ஒன்று திருக்குறள். நாடாளுமன்ற வளாகத்தில் திருவள்ளூவர் சிலை அமைக்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறேன்.

அதேபோல் ஒவ்வொரு முறை நாடாளுமன்றக் கூட்டம் தொடங்கும் போதும், திருக்குறள் ஒன்றைக் கூறி தொடங்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளேன். இத்துடன் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்து கொள்கிறேன். சென்னையில் ரஜினிகாந்த் மகள் திருமணத்தில் கலந்து கொள்ள இருப்பதால், இங்கிருந்து நேரடியாக விமானம் மூலம் செல்கிறேன் என்று கூறினார்.

அடுத்த செய்தி