ஆப்நகரம்

உலகின் நீளமான கால்கள்: டீனேஜ் பெண் கின்னஸ் சாதனை!

உலகின் நீளமான கால்களை கொண்டதற்காக அமெரிக்காவை சேர்ந்த இளம் டீனேஜ் பெண் கின்னஸ் சாதனை படைத்துள்ளார்.

Samayam Tamil 11 Oct 2020, 12:57 pm
உலகிலேயே மிக நீளமான கால்களை கொண்டதற்காக அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தை சேர்ந்த மெசி கியூரின் என்ற 17 வயது இளம் பெண் கின்னஸ் சாதனையை முறியடித்துள்ளார். ஒரு டீனேஜராக மிக நீளமான கால்களை கொண்ட நபர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.
Samayam Tamil Maci Currin (Photo: Instagram)


மெசி கியூரினின் ஒட்டுமொத்த உயரத்தில் கால்கள் மட்டும் 60 விழுக்காடு பங்கு வகிக்கின்றன. மெசியின் மொத்த உயரம் 6 அடி 10 அங்குலம். அவரது தந்தையின் உயரம் 6 அடி 5 அங்குலம். அவரது சகோதரரின் உயரம் 6 அடி 4 அங்குலம். மெசியின் வலது காலின் உயரம் 52.874 அங்குலம்.

கொரோனாவால் 12,000 விலங்குகள் கொத்து கொத்தாக பலி!

மெசி கியூரினை டிக்டாக்கில் 17 லட்சம் பேரும், இன்ஸ்டகிராமில் 50,000 பேரும் பின்தொடருகின்றனர். தன்னம்பிக்கை குறித்து மெசி கியூரின் அடிக்கடி பதிவிட்டு மற்றவர்களை ஈர்த்து வருகிறார். அதிக உயரம் கொண்டவர்கள் அதை ஏற்றுக்கொண்டு தன்னம்பிக்கையுடன் இருக்க வேண்டுமென மெசி கூறுகிறார்.

மெசி கியூரின் பேசியபோது, “உயரமாக இருக்கும் எல்லா பெண்களும் தங்களது உயரத்தை ஒரு பரிசாக கருதவேண்டும். உயரமாக இருப்பதை கண்டு நீங்கள் வெட்கப்படக்கூடாது. அதை முழுமையாக தழுவிக்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

மெசி கியூரின் இளம் வயதில் இருந்தே மற்ற குழந்தைகளை காட்டிலும் உயரமாக இருந்ததை கண்காணித்து வந்ததாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி