ஆப்நகரம்

குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது மதகுருக்களே

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஆஸ்திரேலிய மதகுருக்கள் மீது அதிக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தொிவிக்கப்பட்டுள்ளது.

TOI Contributor 15 Dec 2017, 10:17 pm
குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமையில் ஆஸ்திரேலிய மதகுருக்கள் மீது அதிக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தொிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil terrible crime royal commission final abuse report makes 189 new recommendations
குழந்தைகள் மீதான பாலியல் வன்கொடுமையில் ஈடுபடுவது மதகுருக்களே

ஆஸ்திரேலியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள் தொடா்பாக கடந்த ஐந்து ஆண்டுகளாக ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அந்த ஆய்வு தற்போது முடிவுக்கு வந்துள்ளது. இது தொடா்பாக வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் சில திடுக்கிடும் தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

அந்த அறிக்கையில், 400க்கும் அதிகமான பாிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அதில் மத குருக்கள் மற்றும் பள்ளி ஆசிரியா்கள் மீதுதான் அதிக அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்திருப்பதாகவும், குழந்தைகளை காப்பதில் அனைத்து துறைகளும் தோல்வி அடைந்திருப்தாகவும் தொிவிக்கப்பட்டுள்ளது. ஆய்வின் அறிக்கையானது பல்வேறு தரப்பினருக்கும் அதிா்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி