ஆப்நகரம்

தீவிரவாதத்திற்கு 'ஃபத்வா' அறிவித்தனர் வங்காளதேச மதகுருக்கள்

இஸ்லாம் மதத்தின் பெயரால் தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாவம் எனவும், இஸ்லாம் அமைதியை விரும்பும் ஒரு மார்க்கம் எனவும் வங்காளதேச மதகுருக்கள் தெரிவித்துள்ளனர்.

TNN 19 Jun 2016, 8:02 pm
இஸ்லாம் மதத்தின் பெயரால் தீவிரவாதத்தில் ஈடுபடுவது பாவம் எனவும், இஸ்லாம் அமைதியை விரும்பும் ஒரு மார்க்கம் எனவும் வங்காளதேச மதகுருக்கள் தெரிவித்துள்ளனர்.
Samayam Tamil terrorism is harambangladesh islamic scholars
தீவிரவாதத்திற்கு 'ஃபத்வா' அறிவித்தனர் வங்காளதேச மதகுருக்கள்

வங்காளதேசத்தில் இந்துக்களுக்கு எதிராக நடைபெற்றுவரும் பயங்கரவாத செயல்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதத்தில் வங்காள தேசத்தின் தலைமை மதகுருவான மெளலானா ஃபரீத் உத்தின் மசூத் ,பத்திரிக்கையாளர்களை சந்தித்தார்.அப்போது அவர்,”சில தீவிரவாதிகள் தங்களை புனித போராளிகள்(ஜிகாதிகள்) என தவறாக புரிந்துகொண்டிருக்கிறார்கள்.இஸ்லாம் அமைதிக்கான மார்க்கம்.இஸ்லாம் எப்போதும் தீவிரவாதத்தை ஆதரிக்காது.

தீவிரவாத தாக்குதல்களில் ஈடுபடுபவர்கள் அனைவரும் புனித குரானில் கூறியுள்ளபடி நரகத்திற்குதான் செல்வார்கள்.மேலும் தீவிரவாதிகளின் இறுதிச்சடங்குகளில் கலந்து கொள்வது,அவர்களுக்கு ஆதரவு தெரிவிப்பது பாவச்செயல்(ஹராம்)ஆகும்.” என தெரிவித்தார்.மேலும் தீவிரவாதம் மீது ஃபத்வா அறிவித்து அந்நாட்டின் 1,01,524 மதக்குருக்கள் கையொப்பம் இட்டுள்ளனர்.

அடுத்த செய்தி