ஆப்நகரம்

21 உயிரை பலிவாங்கிய தாய்லாந்து வீரர் சுட்டுக்கொலை

​​இரவு முழுவதும் நடந்த பேச்சுவார்த்தைக்குப் பின், தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்று, பிணைகைதிகளாக இருந்தவர்களை மீட்டுள்ளனர்.

Samayam Tamil 9 Feb 2020, 10:20 am
தாய்லாந்து நாட்டில் 21 பேர் உயிரிழப்புக்கு காரணமாக இருந்த முன்னாள் ராணுவ வீரர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
Samayam Tamil thai attack


தாய்லாந்து நாட்டின் வடகிழக்கு பாங்காக்கில் உள்ள கொராட் பகுதியில் உள்ள புத்தமத கோவில் மற்றும் வணிக வளாகம் அருகே , திடீரென ராணுவ வீரர் ஒருவர் பொதுமக்களை நோக்கி கண்மூடித்தனமாக சுட ஆரம்பித்தார்.

இதில் 21 பேர் பலியாகினர். மேலும் 30 க்கும் அதிகமானவர்கள் படுகாயம் அடைந்துள்ளனர். துப்பாக்கி சூடு நடத்தியவர் ஜக்ராபாந்த் தோமா என்ற 32 வயது ராணுவ வீரர் என்பது அடையாளம் காணப்பட்டது.

நேற்று (பிப்ரவரி 08) பகல் 3 மணியளவில் இந்த தாக்குதல் தொடங்கியது. அடுத்தடுத்து பலமுறை துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. மேலும் பலரையும் இவர் பிணைக்கைதிகளாக பிடித்து வைத்திருந்துள்ளார்.

இரவு முழுவதும் நடந்த போராட்டத்திற்கு பிறகு தாக்குதலில் ஈடுபட்ட ராணுவ வீரரை பாதுகாப்பு படையினர் சுட்டுக் கொன்று, பிணைக் கைதிகளாக இருந்தவர்களை மீட்டுள்ளனர்.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு முன்பே, இவர், தனது பேஸ்புக் பக்கத்தில், கையில் துப்பாக்கியுடன் கருப்பு நிற முகமூடி அணிந்தபடி போட்டோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அடையாளம் காண்பதற்கு இந்த பதிவும் முக்கியமானதாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பதிவு ஃபேஸ்புக்கில் இல்லை. இதனை நீக்கி விட்டதாக ஃபேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினர்களுக்கு தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓசா ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி