ஆப்நகரம்

ஃபுளோரிடா மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அமெரிக்கவாழ் இந்தியர்கள்

இர்மா புயல் ஏற்படுத்தியுள்ள சேதத்தால் ஃபுளோரிடா மாகாணத்தில் வீடுகளை இழந்துள்ளோருக்கு அமெரிக்கவாழ் இந்தியர்கள் அடைக்கலம் கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.

TNN 11 Sep 2017, 12:36 pm
இர்மா புயல் ஏற்படுத்தியுள்ள சேதத்தால் ஃபுளோரிடா மாகாணத்தில் வீடுகளை இழந்துள்ளோருக்கு அமெரிக்கவாழ் இந்தியர்கள் அடைக்கலம் கொடுத்து உதவிக்கரம் நீட்டியுள்ளனர்.
Samayam Tamil the americaindians ready to helps the florida people who suffered by irma hurricane
ஃபுளோரிடா மக்களுக்கு ஆதரவுக்கரம் நீட்டிய அமெரிக்கவாழ் இந்தியர்கள்


தென் அட்லாண்டிக் பிராந்தியத்தில் தோன்றிய இர்மா புயலின் கோரத்தாண்டவம் ஒருவழியாக முடிவுக்கு வந்துள்ளது. பல நாடுகளில் பயங்கர பாதிப்புகளை ஏற்படுத்திய இந்த சூறாவளியால் கரீபியன் தீவுகளும், கியூபா மற்றும் ஃபுளோரிடா ஆகிய நாடுகள் பயங்கரமான பேரிழப்பை சந்தித்துள்ளன. ஃபுளோரிடா மாகாணத்தில் அவசர பிரகடன நிலை போடப்பட்டு உடனடியாக 60 லட்சம் மக்கள் வெளியேற்றப்பட்டதால் பெரும் உயிர்சேதம் ஏற்படாமல் தவிர்க்கப்பட்டது. ஆனாலும் புளோரிவை சேர்ந்த மக்கள் தங்கள் உடமைகளை இழந்துள்ளதால் அங்கு வாழும் அமெரிக்க இந்தியர்கள் அவர்களுக்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்துள்ளனர்.



இர்மா ஏற்படுத்திய மழை, புயலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அட்லாண்டாவில் வாழும் அமெரிக்க இந்தியர்கள் அடைக்கலம் கொடுத்துள்ளனர். அட்லாண்டாவில் உள்ள நான்கு ஆலயங்களும் ஃபுளோரிடா மக்கள் தங்குவதற்காக திறந்து விடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாது புளோரிடாவின் பிரபலமான அம்மா கிச்சன் புளோரிடாவில் இருந்து வரும் மக்களுக்கு இலவச உணவு வழங்கப்படும் என்று கூறி உதவி செய்து வருகிறது.

The americaindians ready to helps the florida people who suffered by Irma hurricane

அடுத்த செய்தி