ஆப்நகரம்

சர்வதேச விண்வெளியில் பேட்மிட்டன் விளையாடிய விண்வெளி வீரர்கள்!

சர்வதேச விண்வெளியில் பேட்மிட்டன் விளையாடும் விண்வெளி வீரர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

Samayam Tamil 7 Feb 2018, 6:27 pm
சர்வதேச விண்வெளியில் பேட்மிட்டன் விளையாடும் விண்வெளி வீரர்களின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.
Samayam Tamil the first space badminton tournament
சர்வதேச விண்வெளியில் பேட்மிட்டன் விளையாடிய விண்வெளி வீரர்கள்!


புவியீர்ப்பு விசை இல்லாத விண்வெளியில் நடப்பதே சிரரமான காரியம். இந்த நிலையில், சர்வதேச விண்வெளி நிலையத்தில் உள்ள விண்வெளி வீரர்கள் பேட்மிண்டன் விளையாடி கலக்கியுள்ளனர். ரஷ்யா, அமெரிக்கா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் இப்போட்டியில் கலந்து கொண்டனர். நான்கு பேரும் இரு அணிகளாக பிரிந்து பறந்துகொண்டே விளையாடும் வீடியோ அனைவரிடமும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.



இதுகுறித்து பேசிய ரஷ்ய விண்வெளி வீரர் அலெக்சாண்டர், 'விண்வெளியில் விளையாடுவது செவ்வாய் கிரகத்திற்கு சென்று கொடி நாட்டுவதற்கு சமம்' என்று கூறியுள்ளார்.. மேலும் இப்படி விளையாடுவது வீரர்களுக்கு மன அமைதியை கொடுப்பதோடு அவர்கள் இடையே நட்புறவையும் ஏற்படுத்துகிறது என்று விண்வெளி வீரர்கள் கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி