ஆப்நகரம்

விமானத்தில் வெளிச்சத்திற்கு கணவனின் விபரீத காதல்.!

கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் குடும்பத்துடன் பயணித்த பெண், தனது கணவரின், கள்ளக்காதலை அவரது செல்போன் மூலம் தெரிந்து கொண்டதால் விமானத்திலேயே கத்திக் கூச்சலிட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

TNN 7 Nov 2017, 11:31 am
கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் குடும்பத்துடன் பயணித்த பெண், தனது கணவரின், கள்ளக்காதலை அவரது செல்போன் மூலம் தெரிந்து கொண்டதால் விமானத்திலேயே ​ கத்திக் கூச்சலிட்டதால் விமானம் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
Samayam Tamil the husbands love secrets reveal in his cellphone
விமானத்தில் வெளிச்சத்திற்கு கணவனின் விபரீத காதல்.!


கத்தார் தலைநகர் தோஹாவில் இருந்து இந்தோனேசியாவின் பாலி தீவுக்குச் செல்லும், கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் ஈரானைச் சேர்ந்த ஒரு குடும்பம் பயணித்துள்ளது.

கணவரின் நடத்தை மீது ஏற்கெனவே சந்தேகத்தில் இருந்த பெண் அவர் தூங்கிய நேரம் பார்த்து, கணவனின் விரல்களை பயன்படுத்தி செல்போனை அன் லாக் செய்துள்ளார். செல்போனில் தகவல்கள் மற்றும் வீடியோக்களை பார்த்த போது, கணவனுக்கு பல பெண்களுடன் தகாத உறவு இருப்பதை அறிந்து கொண்ட மனைவி, கணவனை எழுப்பி சண்டை போட்டுள்ளார்.

இதை தடுக்க வந்த ஊழியர்களுடனும் அந்தப் பெண் சண்டையிட்டதால், கத்தார் ஏர்வேஸ் விமானம் சென்னை விமான நிலையத்தில் தரை இறக்கப்பட்டது. பின்னர் அந்தப் பெண், கணவர், குழந்தையுடன் விமான நிலையத்தில் இறக்கி விடப்பட்டார். இந்த சம்பவங்களைப் பார்த்து, கத்தார் ஏர்வேஸ் விமானத்தில் சென்ற அதிர்ச்சியடைந்தனர்.

The husband's love secrets reveal in his cellphone.!

அடுத்த செய்தி