ஆப்நகரம்

ஓவர் டைம் பார்த்த பெண் செய்தியாளர் பலி !

ஜப்பானில் பெண் செய்தியாளர்கள் ஒருவர் அலுவலகத்தில் ஓவர் டைம் பார்த்ததால் பாலியான சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

TNN 6 Oct 2017, 9:26 am
ஜப்பானில் பெண் செய்தியாளர்கள் ஒருவர் அலுவலகத்தில் ஓவர் டைம் பார்த்ததால் பாலியான சம்பவம் பலரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
Samayam Tamil the japan reporter who died because she worked over time
ஓவர் டைம் பார்த்த பெண் செய்தியாளர் பலி !


ஜப்பானில் உள்ள என்.ஹெச்.கே. தொலைக்காட்சி நிறுவனத்தில் அரசியல் செய்திகளை அளிக்கும் நிருபராக வேலை செய்தவர் மிவா சாடோ(31). அவர் கடந்த 2013ம் ஆண்டு ஜூலை மாதம் 24ம் தேதி உயிர் இழந்தார்.

தன் வீட்டு படுக்கையில் ஒரு கையில் செல்போனுடன் அவர் பிணமாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பிரேத பரிசோதனையில் அவர் கரோஷியால்(ஜப்பானிய மொழி) அதாவது அதிக நேரம் வேலை செய்ததால் உயிர் இழந்தது தெரிய வந்தது.

அதிக நேரம் வேலை பார்த்ததால் அவரது இதயம் பாதிக்கப்பட்டு உயிர் இழந்துள்ளார். அவர் உயிர் இழந்த மாதம் ஒரு உள்ளூர் மற்றும் தேசிய தேர்தல் குறித்த செய்திகளை அளித்துள்ளார்.

அவர் ஒரு மாதத்தில் 159 மணிநேரம் ஓவர் டைம் பார்த்துள்ளார். அப்பா வேலைப்பளு அதிகமாக உள்ளது, ராஜினாமா செய்துவிடலாமா என்று தினமும் யோசனையாக உள்ளது என்று அவர் இறக்கும் முன்பு தனது தந்தைக்கு இமெயில் அனுப்பியுள்ளார்.

மிவாவின் மரணம் குறித்து வெளியே தெரிவிக்க வேண்டாம் என்று அவரின் பெற்றோர் கேட்டுக் கொண்டதால் என்.ஹெச்.கே. நிறுவனம் இத்தனை ஆண்டுகள் அமைதி காத்துள்ளது.

வேலைப்பளுவால் மக்கள் அவதிப்படுபதற்கு தீர்வு காண ஜப்பான் அரசு தீவிரம் காட்டி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

the japan reporter who died because she worked over time

அடுத்த செய்தி