ஆப்நகரம்

உலகை காப்பாற்றிய மனிதன் ரஷியாவில் காலமானார்..!

அமெரிக்கா மற்றும் ரஷியா இடையிலான பெரும் அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தியதன் மூலம் உலகை காப்பாற்றிய ரஷியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் மரணமடைந்து விட்டதாக அவரது மகன் அறிவித்துள்ளார்.

TNN 19 Sep 2017, 9:08 pm
அமெரிக்கா மற்றும் ரஷியா இடையிலான பெரும் அணு ஆயுத போரை தடுத்து நிறுத்தியதன் மூலம் உலகை காப்பாற்றிய ரஷியாவின் முன்னாள் ராணுவ அதிகாரி ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ் மரணமடைந்து விட்டதாக அவரது மகன் அறிவித்துள்ளார்.
Samayam Tamil the man who saved the world was died in russia
உலகை காப்பாற்றிய மனிதன் ரஷியாவில் காலமானார்..!


ராணுவ அதிகாரியாக இருந்த ஸ்டானிஸ்லாவ் பெட்ராவ், தெற்கு மாஸ்கோவில் கடந்த 1983-ம் ஆண்டு செப்டம்பர் 26-ம் தேதி ராணுவ தளத்தில் ரேடார்களை கண்காணிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளார். அந்த சமயம் அமெரிக்கா தொடர்ச்சியாக கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகளை வீசியதாக ரேடார் தரவுகள் சிக்னல் கொடுத்து உள்ளன. ஆனால், அணு ஆயுத போர் நிகழாமல் தடுக்க, ஆழமாக யோசித்த ஸ்டானிஸ்லாவ், கிடைக்கப்பெற்ற தகவல்கள் அனைத்தும் தவறானது என்ற பொய் அறிக்கையை விடுத்தார். இத்தகவலை அவர் மறைத்ததன் மூலம், இருநாடுகள் இடையிலான அணு ஆயுத போரானது நிறுத்தப்பட்டது.

தனது அசாத்தியமான முடிவுகளால், பல்வேறு சர்வதேச விருதுகளை வாங்கியுள்ள ஸ்டானிஸ்லாவ் ஐ.நா.வினாலும் பாராட்டப்பட்டு கவுரவிக்கப்பட்டவர். 77 வயதான ஸ்டானிஸ்லாவ் ,மரண செய்தியானது ரஷியா மற்றும் வெளிநாட்டு ஊடகங்களில் ஒரு மாதங்கள் கழித்தே தலைப்பு செய்தியாகி வெளியாகியுள்ளது. அவருடைய ஜெர்மனி நண்பர் தனது பிளாக்கில் எழுதியதை தொடர்ந்து ஸ்டானிஸ்லாவ் மரணமடைந்த செய்தி வெளியுலகிற்கு தெரிய வந்தது.

"The Man Who Saved the World" என்ற ஆவணப்படத்தின் மூலம் அசாதாரண மனிதன் ஸ்டானிஸ்லாவ் பெட்ராவின் வாழ்க்கை வரலாறு படமாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

The Man Who Saved the World was died in Russia.

அடுத்த செய்தி