ஆப்நகரம்

2019 இல் 'அய்யயோ' சொல்ல வைத்த சம்பவங்கள்...

கடந்த ஆண்டில் உலகத்தின் பல்வேறு பகுதிகளில் நடந்த சர்ச்சை மற்றும் விபரீத சம்பவங்களை குறித்த ஒரு தொகுப்பு...

Samayam Tamil 31 Dec 2019, 2:19 pm
புத்தாண்டு பிறக்க இன்னும் ஒரு நாளே உள்ளது. இதனால் 2019 ஆம் ஆண்டில் நடந்த சில முக்கிய விபரீத மற்றும் வியப்பான நிகழ்வுகளை நினைவுகூரும் வகையில் சில செய்திகளை பார்க்கலாம்.
Samayam Tamil 2019 இல் அய்யயோ சொல்ல வைத்த சம்பவங்கள்



உறவுகொண்ட போது தவறி விழுந்த காதலர்கள் பலி:

கடந்த செப்டம்பர் மாதம் 30 ஆம் தேதி ஈக்வடார் நாட்டின் குயிட்டோவில் 28 வயதான இளம்பெண் ஒருவர் பட்டமளிப்பு விழா ஒன்றில் கலந்துகொண்டார். பின்னர் அதே கட்டிடத்தில் தந்த 35 வயதான காதலருடன் பால்கனியின் உடலுறவில் ஈடுபட்டனர்.

அப்போது எதிர்பாராத நிலையில் இருவரும் அங்கிருந்து தவறி விழுந்தனர். 3 வது மாடியில் இருந்து விழுந்த அவர்கள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியாகினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


இரவில் ஆக்சிஜனை தரும் மரங்கள்:


கடந்த நவம்பர் மாதம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில் அவர் ' மரங்களை வெட்டுவதால் பிற்காலத்தில் நமக்கு பெரும் விளைவுகளை தரும். மரங்கள் தான் கார்பன்டை ஆக்ஸைடை உல் இழுத்துக்கொண்டு இரவில் நமக்கு ஆக்சிஜனை அளிக்கிறது' இவ்வாறு உல்டாவாக பேசினார். இந்த வீடிய சமூக வலைத்தளத்தில் வெளியானதை அடுத்து நெட்டிசன்கள் அவரை ' ஐன்ஸ்டின் கான் ' என கலாய்த்து தள்ளினர்.


தன்னுடைய இயற்கை வாயுவால் கொசுக்களை கொள்வேன்:

உகாண்டாவைச் சேர்ந்த ஜோ வமிரமா என்பவர் கொசுக்களை கொள்ள என்னிடம் வழி உள்ளது. அதை நடைமுறைப்படுத்த எனக்கு உதவி செய்யுங்கள் என அந்நாட்டு தொழில் நிறுவங்களை அணுகினார். அதாவது, கெமிக்கலை கொண்டு ஏன் கொசுக்களை அழிக்க வேண்டும்? என்னுடைய இயற்கை வாயுவால் 6 மீட்டர் தொலைவில் உள்ள கொசுக்களை என்னால் அழிக்க முடிகிறது என கூறினார். இதை சோதித்து பார்த்த சிலர் ஜோவுடைய திறமையை கண்டு அதிர்ந்து போயினர்.


நீண்ட நேரம் உறவுகொண்ட பூனைக்கு குளுக்கோஸ்:

ரஷியாவில் ஒருவர் ஆண் பூனை ஒன்றை வளர்த்து வந்துள்ளார். அந்த சம்பவ நாளன்று இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மனை வரையிலும் 6 பெண் பூனைகளுடன் உறவு கொண்டதால் உடல் வலுவிழந்து ஆபத்தான நிலைக்கு சென்றுள்ளது. இதனால் அதன் உரிமையாளர் அந்த பொன்னையா மருத்துவமனைக்கு கொண்டு சென்று குளுக்கோஸ் ஏற்றி உயிர் பிழைக்க செய்த சம்பவம் அங்கு பரவலாக பேசப்பட்டது.

அடுத்த செய்தி