ஆப்நகரம்

அமெரிக்க அதிபரால் 3-ஆம் உலகப் போர் ஏற்படும் அபாயம்.!

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின், விதண்டாவாத கருத்துகளால் மூன்றாம் உலகப் போர் நிகழ வாய்ப்புள்ளதாக அமெரிக்க மூத்த எம்.பி. பாப் கார்கர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 10 Oct 2017, 11:41 am
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின், விதண்டாவாத கருத்துகளால் மூன்றாம் உலகப் போர் நிகழ வாய்ப்புள்ளதாக அமெரிக்க மூத்த எம்.பி. பாப் கார்கர் கூறியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil the threat of a 3rd world war by the trump
அமெரிக்க அதிபரால் 3-ஆம் உலகப் போர் ஏற்படும் அபாயம்.!


அமெரிக்காவும், வடகொரியாவுக்கும் மோதல் முற்றியுள்ளது. இந்த நிலையில் இரு நாடுகளுமே தங்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு போருக்கு தயாராவதாக அறைகூவல் விடுத்து வருகின்றன. மேலும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் “வடகொரியாவை முற்றிலும் அழித்து விடுவேன் என்றும் அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பில்லை, ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே தீர்வு” என்றும் ட்விட்டரில் தனது கருத்துகளை பதிவிட்டுள்ளார்.

வடகொரியாவும் அமெரிக்காவை சும்மா விடுவதாக இல்லை. ஒரு கை பார்க்க நாங்களும் தயார் என்று சமீபத்தில் அணு குண்டை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வடகொரியா சோதனை செய்தது. மேலும் அமெரிக்காவின் குவாம் தீவு வரை பாய்ந்து செல்லும் திறன் கொண்ட அதிநவீன ஏவுகணைகளையும் சோதனை செய்துள்ளது. இது மட்டுமில்லாமல் சீனாவும், ரஷ்யாவும் வடகொரியாவுக்கு மறைமுகமாக ஆதரவு அளித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த நிஅலையில், அமெரிக்காவின் ஆளும் கட்சியான குடியரசு கட்சியின் மூத்த எம்.பி. பாப் கார்கர் பிரபல நாளிதழுக்கு அளித்த பேட்டியில் கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

டொனால்டு ட்ரம்ப் பயிற்சி அதிபர் போல செயல்படுகிறார் என்றும் ரியாலிட்டி ஷோவில் பேசுவது போல ட்விட்டரில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டு வருகிறார் என்றும் கூறியுள்ளார். மேலும், அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின், இத்தகைய விதண்டாவாத கருத்துகளால் மூன்றாம் உலகப் போர் நிகழ வாய்ப்புள்ளதாக அமெரிக்க மூத்த எம்.பி. பாப் கார்கர் கூறியுள்ளார்.

The threat of a 3rd world war by the trump

அடுத்த செய்தி