ஆப்நகரம்

ஆசையாய் வாங்கிய பூனை குட்டி புலியாய் மாறிய சம்பவம்..! அதிர்ந்து போன தம்பதி

பிரான்ஸ் நாட்டில் பூனை குட்டியை ஆர்டர் செய்த தம்பதிக்கு புலிக்குட்டி டெலிவரி செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 12 Oct 2020, 9:31 pm
பிரான்ஸ் நாட்டில் சவானா வகையைச் சேர்ந்த பூனை வகைகளை மக்கள் வீட்டில் வளர்ப்பது வாடிக்கை. விலை அதிகமாக இருந்தாலும் புலிகளை போல காட்சி அளிப்பதால் அந்த பூனைகளை வீட்டில் செல்லமாக வளர்ப்பதில் மக்கள் ஆர்வம் காட்டுவதாக கூறுகின்றனர்.
Samayam Tamil file pic


இந்த நிலையில் லா ஹவரே பகுதியைச் சேர்ந்த தம்பதி ஒன்று மூன்று மாதங்களுக்கு முன்னர் ஆன்லைனில் சவானா வகை பூனை குட்டியை 6,000 யூரோக்களுக்கு ஆர்டர் செய்துள்ளனர். இந்திய மதிப்பில் சுமார் 5 லட்சத்து 20 ஆயிரம் ரூபாயாகும். அதன்படி, அவர்களது வீட்டுக்கு பூனை குட்டியை டெலிவரி செய்துள்ளனர்.

பூனைக்கு குட்டிக்கு பெயர் சூட்டி ஆசையாய் வளர்த்து வந்தவர்களுக்கு அதன் மீதான நடவடிக்கைகளில் சந்தேகம் ஏற்பட்டுள்ளது. சாதாரண பூனைக்குட்டி சுபாவங்கள் இல்லாமால் வேறு விதமான செய்கைகள் அந்த பூனைக்குட்டியிடம் வெளிப்பட்டுள்ளது. சரி எதற்கும் சோதனை செய்து விடுவோம் என்று நினைத்த தம்பதி, வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர்.

வெற்றி பெறுவாரா ஜோ பைடன்? கருத்துக் கணிப்பில் தொடர்ந்து முதலிடம்!

அதன் பேரில் தம்பதியின் வீட்டுக்கு வந்த போலீசார் பூனை குட்டியை சோதனையிட்டனர். அப்போதுதான் தெரிந்தது அது பூனையில்லை, இந்தோனேசிய வகையை சேர்ந்த புலிக்குட்டி என்று. இதையடுத்து அதிர்ச்சியடைந்த தம்பதி, புலிக்குட்டியை டெலிவரி செய்தவரை குறித்து புகார் அளித்தனர். தொடர்ந்து விசாரணை செய்து போலீசார் இந்த சம்பவத்தில் நீண்ட காலமாக ஈடுபட்டு வந்த 7 பேரை கைது செய்துள்ளனர்.

அடுத்த செய்தி