ஆப்நகரம்

மலையளவு கட்டிடம்.. வானளவு தைரியம்.. சாதித்து காட்டிய மாற்றுத்திறனாளி!

மிக உயரமான கட்டிடத்தில் வீல் சேரிலேயே 250 அடிக்கு ஏறியுள்ளார் மாற்றுத்திறனாளி ஒருவர்.

Samayam Tamil 18 Jan 2021, 7:05 pm
Samayam Tamil Lai Chi Wai

மனதில் உறுதி இருந்தால் எதையும் சாதித்துக் காட்டலாம் என்பதை நிரூபித்திருக்கிறார் மாற்றுத்திறனாளி ஒருவர். ஹாங் காங்கை சேர்ந்த மாற்றுத்திறனாளி லய் சி வய். இவருக்கு வயது 37. கொவொலூன் பகுதியில் உள்ள கட்டிடத்தில் 250 அடி உயரத்துக்கு வீல் சேரில் அமர்ந்தபடியே ஏறி சாதித்து காட்டியிருக்கிறார் லய் சி வய்.

தொடர்ந்து 10 மணி நேரத்துக்கு இவர் வீல் சேரில் அமர்ந்தபடி கட்டிடத்தில் ஏறியுள்ளார். முதுகெலும்பு பிரச்சினைகளால் அவதிப்படும் நோயாளிகளுக்கு உதவுவதற்காக இந்த நிகழ்வை அவர் நடத்தியுள்ளார். இந்த நிகழ்வால் ஒரு மில்லியன் டாலர் (7.3 கோடி ரூபாய்க்கு மேல்) நிதி திரட்டியுள்ளார்.

லய் சி வய் ஏறிய கட்டிடமான நினா டவரின் மொத்த உயரம் 320 மீட்டர். இதில் 250 மீட்டர் உயரத்துக்கு லய் ஏறினார். பாதுகாப்பு காரணமாக அவரது முயற்சி இடையிலேயே நிறுத்தப்பட்டது.
கொரோனா தடுப்பூசியால் மரணங்கள்.. கலக்கத்தில் உலக நாடுகள்.. அடுத்து என்ன?

2011ஆம் ஆண்டுக்கு முன், மலை ஏறுதல் போட்டியில் லய் சி வய் நான்கு முறை ஆசிய சாம்பியனாக வெற்றிபெற்றுள்ளார். சுமார் 10 ஆண்டுகளுக்கு முன் நடந்த கார் விபத்தில் லய் சி வய்க்கு ஊனம் ஏற்பட்டது. அப்போது முதல் அவர் வீல் சேரின் உதவியால் இயங்கி வருகிறார்.

கட்டிடத்தில் ஏறிய நிகழ்வுக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய லய் சி வய், “மாற்றுத்திறனாளிகளின் பிரச்சினைகளை சிலர் புரிந்துகொள்வதே இல்லை. மாற்றுத்திறனாளிகள் பலவீனமானவர்கள், அவர்களுக்கு உதவி வேண்டும், பரிதாபம் வேண்டும் என சிலர் நினைக்கின்றனர்.

கட்டிடத்தில் ஏறுவதற்கு முன் பயந்தேன். மலையில் ஏறும்போது பாறைகளிலும், சிறு துவாரங்களிலும் பிடித்துக்கொள்ளலாம். கட்டிடத்தில் கண்ணாடியில் ஏறும்போது கயிற்றை மட்டுமே நம்பியிருந்தேன். நான் மாற்றுத்திறனாளி என்பதையே மறந்துவிட்டேன். எனக்கு பிடித்ததை என்னால் செய்ய முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி