ஆப்நகரம்

பாகிஸ்தானுடனான உறவு சவாலானது: ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி

பாகிஸ்தானுடன் உறவு கொள்வது சவாலான ஒன்று என்று ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.

TNN 25 Jul 2016, 3:28 am
காபூல்: பாகிஸ்தானுடன் உறவு கொள்வது சவாலான ஒன்று என்று ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார்.
Samayam Tamil ties with pakistan bigger challenge says afghan president ghani
பாகிஸ்தானுடனான உறவு சவாலானது: ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி


பாகிஸ்தான் உடனான உறவு குறித்து, ஆப்கன் அதிபர் அஷ்ரப் கானி கடுமையாக சாடியுள்ளார். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு புகலிடமாக விளங்குவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் அதனுடன் உறவு கொள்வது மிகவும் சவாலான விஷயமாக இருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

இதற்கிடையில் இந்தியாவுடன் உறவு கொள்வதை பெருமையாக கருதுவதாக அஷ்ரப் கானி தெரிவித்துள்ளார். எப்போது தான் தீவிரவாத குழுக்களுக்கு அனுமதி மறுக்கப் போகிறதோ? என்று கேள்வி எழுப்பியுள்ளது. அவ்வாறு புகலிடம் அளிப்பதால் தங்கள் நாட்டிற்கும் பெரும் அச்சுறுத்தலாக இருப்பதாக கவலை தெரிவித்துள்ளார்.

மேலும் பாகிஸ்தானில் உள்ள தலிபான் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக இருப்பதாக கூறியுள்ளார். தங்கள் நாட்டிலுள்ள தீவிரவாத குழுக்கள் மீது நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தானை ஒருபோதும் நம்பப்போவதில்லை என்றும் குறிப்பிட்டுள்ளார். அமைதிப் பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லாதவர்கள், அந்நாட்டை விட்டு வெளியேறுமாறும் அஷ்ரப் கானி வலியுறுத்தியுள்ளார்.

அடுத்த செய்தி