ஆப்நகரம்

அமெரிக்காவிலும் டிக்டாக்கிற்கு விரைவில் தடை?!

இந்தியாவை தொடர்ந்து அமெரிக்காவிலும் சீன செயலியான டிக்டாக்கிற்கு விரைவில் தடை விதிக்கப்படவுள்ளதாக தெரிகிறது. இதற்கான சட்டம் அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் நிறைவேற்றப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

Samayam Tamil 24 Jul 2020, 12:30 am
லடாக் எல்லைப் பகுதியில் சீன ராணுவத்தினருடன் அண்மையில் நடைபெற்ற மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் வீரமரணம் அடைந்தனர். இச்சம்பவத்துக்கு பதிலடி தரும் விதத்திலும், தகவல் திருட்டை தடுக்கும் நோக்கிலும் சீனாவின் டிக்டாக், ஹெலோ உள்ளிட்ட 59 செயலிகளுக்கு இந்தியாவில் தடைவிதிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil tiktok


இந்தியாவின் இந்த அதிரடி நடவடிக்கைக்கு அமெரிக்கா வரவேற்பு தெரிவித்திருந்தது. அத்துடன் சீனாவிலும் டிக்டாக்கிற்கு தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க அரசு அண்மையில் தெரிவித்திருந்தது.

இந்த நிலையில், அமெரிக்கர்களின் தரவுகளை சீனா திருட வாய்ப்புள்ளதால். டிக்டாக் செயலிக்கு தடை விதிக்க வேண்டும் என்று அமெரிக்க எம்.பி.க்கள் வலியுறுத்தி வந்தனர்.

சீன தூதரகங்களை மூடிருவோம்... மிரட்டும் ட்ரம்ப்

இதன் எதிரொலியாக, டிக்டாக் செயலிக்கு தடை விதிப்பது தொடர்பான சட்டத்தை இயற்ற அமெரிக்க நாடாளுமன்ற செனட் சபையில் ஒருமானதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இதன் தொடர்ச்சியாக இத்தடைச் சட்டம் தொடர்பான வாக்கெடுப்பு அமெரிக்க செனட் சபையில் விரைவில் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி