ஆப்நகரம்

UAE-க்குள் நுழைய முடியாமல் தவிக்கும் பயணிகள்; இந்த டிக்கெட் கட்டாயம் வேணுமாம்!

இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாட்டு பயணிகள் UAE-க்குள் நுழைய முடியாமல் தவித்து வருகின்றனர்.

Samayam Tamil 17 Oct 2020, 12:28 pm
UAE எனப்படும் ஐக்கிய அரபு அமீரகத்தில் நுழைய கட்டாய ரிட்டர்ன் டிக்கெட் வேண்டுமென்று அந்நாட்டின் முன்னணி ஏர்லைன்ஸ் மற்றும் ட்ராவல் ஏஜெண்ட்களும் தெரிவித்துள்ளனர். இந்த விதிமுறைகள் உடனடியாக அமலுக்கு வந்ததால் இந்தியா, பாகிஸ்தானைச் சேர்ந்த பலரும் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இவர்கள் அனைவரிடமும் ரிட்டர்ன் டிக்கெட்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதுதொடர்பாக துபாயில் உள்ள பாகிஸ்தான் தூதரகம் கூறுகையில், எங்கள் நாட்டைச் சேர்ந்த 678 பாகிஸ்தானியர்கள், ஐக்கிய அரபு அமீரகத்திற்குள் நுழைய முடியாமல் தவித்து வருவதாக தெரிவித்துள்ளது.
Samayam Tamil Dubai Ban


இதேபோல் 140க்கும் மேற்பட்ட இந்தியப் பயணிகள் துபாய் விமான நிலையத்தில் தவித்துக் கொண்டிருக்கின்றனர். இவர்களை உடனடியாக நாடு திரும்புமாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவின் ஏர் இந்தியா, இண்டிகோ ஏர்லைன்ஸ் நிறுவனங்கள் தங்களது பயணிகள் மற்றும் ட்ராவல் ஏஜெண்ட்களுக்கு தகவல் தெரிவித்துள்ளன.

சீனாவை கழட்டிவிட்ட நேபாளம்: இந்தியாவுக்கு ஆதரவா?

அதாவது UAE செல்லும் அனைத்து இந்திய சுற்றுலா பயணிகளும் ரிட்டர்ன் டிக்கெட்கள் இருந்தால் மட்டுமே நாட்டிற்குள் அனுமதிக்கப்படுவர். இல்லையெனில் அனுமதிக்கப்பட மாட்டார்கள். எனவே பயணிகள் ரிட்டர்ன் டிக்கெட் பெற்று பயணிப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மீண்டும் இந்தியாவிற்கு திரும்புவதற்கான செலவை பயணிகள் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது. இத்தகைய கட்டுப்பாடுகள் இந்தியா, பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகிய நாடுகளுக்கு மட்டும் பொருந்தும் என்று சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஆனால் இது அதிகாரப்பூர்வ அறிவிப்பு இல்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி