ஆப்நகரம்

இந்தியா சொல்வதெல்லாம் பொய் - ட்ரம்ப் காட்டம்

கொரோனா எண்ணிக்கை விவகாரத்தில் இந்தியா உண்மையை மறைப்பதாக ட்ரம்ப் குற்றம்சாட்டியுள்ளார்.

Samayam Tamil 30 Sep 2020, 2:23 pm

கொரோனா வைரஸால் உலகமே கடந்த 9 மாதங்களாக முடங்கியிருக்கிறது. அதிலும், உலகளவில் கொரோனாவால் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நாடு அமெரிக்கா. இதுவரை அமெரிக்காவில் 70 லட்சத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 2 லட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
Samayam Tamil Trump


அமெரிக்காவில் அதிபர் தேர்தல் நெருங்கி வரும் சூழலில் நேற்று இரு டொனால்ட் ட்ரம்ப், ஜோ பைடன் ஆகிய இரு வேட்பாளர்களிடையே நேரடி விவாதம் நடைபெற்றது. இதில் இருவருமே விவாதம் என்பதை மறந்துவிட்டு ஒருவரை ஒருவர் கடுமையாக தாக்கி பேசினர்.

குழாயடி சண்டை ரேஞ்சுக்கு இறங்கிய ட்ரம்ப்

அப்போது, டெமாக்ட்ரடிக் கட்சி வேட்பாளரான ஜோ பைடன், “கொரோனாவால் எழுபது லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். ஆனால் இதை கட்டுப்படுத்த அதிபரிடம் எந்த திட்டமும் இல்லை. கொரோனாவால் ஏராளமானோர் தங்களது குடும்பத்தினரை இழந்துள்ளனர்” என்று குற்றம்சாட்டினார்.

அதற்கு பதிலளித்த ட்ரம்ப், “அது சீனாவின் தவறு. இதெல்லாம் நடந்திருக்கவே கூடாது. நான் நடவடிக்கை எடுக்காமல் விட்டிருந்தால் பல லட்சக்கணக்கானோர் உயிரிழந்திருப்பார்கள்.

கொரோனா பலி எண்ணிக்கையை பொறுத்தவரை, சீனாவில் எத்தனை பேர் இறந்தார்கள் என்று நமக்கு தெரியாது. ரஷ்யா, இந்தியாவில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்று நமக்கு தெரியாது. இந்த நாடுகள் உண்மையான எண்ணிக்கையை வெளியிடுவதில்லை” என்று தெரிவித்தார்.

அடுத்த செய்தி