ஆப்நகரம்

அமெரிக்காவில் எச்1பி விசா வைத்திருந்தால் புது கெடுபிடி!

எச்1பி விசாவுடன் வசிப்பவர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் வேலை செய்வதை தடுக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

TNN 16 Dec 2017, 5:44 pm
வாஷிங்டன்: எச்1பி விசாவுடன் வசிப்பவர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் வேலை செய்வதை தடுக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Samayam Tamil trump administration to stop spouses of h 1b visa holders from working in us
அமெரிக்காவில் எச்1பி விசா வைத்திருந்தால் புது கெடுபிடி!


கடந்த 2015ஆம் ஆண்டு முதல் எச்1பி விசா பெற்று அமெரிக்காவில் வசிப்பவர்களின் கணவன் அல்லது மனைவி அமெரிக்காவில் பணியாற்ற அப்போதைய அதிபர் ஒபாமா அனுமதி வழங்கினார். இதற்கு அந்நாட்டில் எதிர்ப்பு எழுந்தது.

இந்த உத்தரவை அமெரிக்க உள்துறை வாபஸ் பெற முடிவு செய்துள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. அமெரிக்கர்களுக்கு பணியில் முன்னுரிமை கிடைக்கும் விதமாக இந்த முடிவு எடுக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

எச்1பி விசா பெற்றிருப்பவர்களின் கணவன் அல்லது மனைவி வேலையை இழக்க நேரிடும். இதனால், அவர்கள் அமெரிக்காவிலிருந்து வெளியேறக்கூடும். இதனால், திறமை வாய்ந்த பணியாளர்களையும் இழக்கும் நிலை உண்டாகும் என்பதால் எச்1பி விசாவில் மாற்றங்களை ஏற்படுத்தினாலே போதும் என்றும் கூறப்படுகிறது.

அடுத்த செய்தி