ஆப்நகரம்

கடைசி நாளில் டொனால்ட் ட்ரம்ப் செய்த காரியத்தை பாருங்க!

முன்னாள் உதவியாளர் உள்பட 73 பேருக்கு டொனால்ட் ட்ரம்ப் மன்னிப்பு வழங்கியுள்ளார்.

Samayam Tamil 20 Jan 2021, 4:29 pm
கடந்த நவம்பர் மாதம் 3ஆம் தேதி அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்றது. இதில் ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் வெற்றிபெற்றார். இன்று (ஜனவரி) பதவியேற்பு விழா நடைபெறவிருக்கிறது. துணை அதிபராக கமலா ஹாரிஸ் பதவி ஏற்க இருக்கிறார்.
Samayam Tamil Trump


இன்று டொனால்ட் ட்ரம்ப் பதவிக்காலத்தின் கடைசி நாளாகும். ட்ரம்ப் மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருக்கும் நிலையில், அவர் தனக்கு தானே மன்னிப்பு கொடுத்துவிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. இப்படி செய்தால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் உண்மை போல் ஆகிவிடும் என்று வெள்ளை மாளிகை அதிகாரிகள் தெரிவித்தனர்.

கொரோனா தடுப்பூசியால் உயிருக்கு ஆபத்து இல்லை.. நிம்மதியான செய்தி மக்களே!
இந்நிலையில், முன்னாள் வெள்ளை மாளிகை உதவியாளர் ஸ்டீவ் பேனன் உள்பட 73 பேருக்கு ட்ரம்ப் மன்னிப்பு வழங்கியுள்ளார். 2016ஆம் ஆண்டு தேர்தலின்போது டொனால்ட் ட்ரம்பின் முக்கிய ஆலோசகராக ஸ்டீவ் பேனன் பொறுப்பு வகித்தார். அமெரிக்க-மெக்சிகோ எல்லையில் சுவர் கட்ட ட்ரம்பின் ஆதரவாளர்களை வைத்து தனியார் நிதி திரட்ட முயன்றதாக ஸ்டீவ் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

ஸ்டீன் கருணை மனு தாக்கல் செய்திருந்தார். அவருக்கு மன்னிப்பு வழங்க வேண்டாம் என ட்ரம்பிடம் வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஆலோசனை வழங்கியிருந்தனர். எனினும், ட்ரம்பின் கடைசி நாளான இன்று ஸ்டீவுக்கு மன்னிப்பு வழங்கியுள்ளார்.

வெட்டியா இருக்க சம்பளம்.. தன்னை தானே வாடகைக்கு விடும் அதிசய மனிதர்!
டொனால்ட் ட்ரம்பின் ஆதரவாளர்கள் கேபிடல் ஹில் பகுதியில் ஜனவரி 6ஆம் தேதி வன்முறை போராட்டங்களில் ஈடுபட்டனர். வன்முறையை தூண்டியதாக டொனால்ட் ட்ரம்ப் மீது கண்டன தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், ட்ரம்ப் தனக்கு தானே மன்னிப்பு கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. எனினும், இன்று ட்ரம்ப் மன்னிப்பு வழங்கியவர்களில் அவரும், அவரது குடும்பத்தாரும் இல்லை.

அடுத்த செய்தி