ஆப்நகரம்

இலங்கையில் இன்று உயிரிழந்தது ”138 மில்லியன்”? டிரம்ப் டுவிட்டால் வெடித்தது சர்ச்சை!

இன்று இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை குறித்து, அமெரிக்க அதிபர் போட்ட டுவிட்டால் பெரும் சர்ச்சை வெடித்துள்ளது.

Samayam Tamil 21 Apr 2019, 6:36 pm
இலங்கையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் இன்று டுவிட் ஒன்று பதிவு செய்தார். அதில் பலி எண்ணிக்கை 138 மில்லியன் எனக் குறிப்பிட்டதால் சர்ச்சை வெடித்தது.
Samayam Tamil Trump


ஆனால் சமீபத்திய நிலவரப்படி, இலங்கையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 217 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் 35 வெளிநாட்டினர் அடங்குவர். நூற்றுக்கணக்கானோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இதனை தவறாக குறிப்பிட்டு, ”இலங்கையின் தேவாலயங்கள் மற்றும் ஓட்டல்களில் நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல்கள் கடும் கண்டனத்திற்கு உரியது. இதில் 138 மில்லியன் பேர் உயிரிழந்துள்ளனர். 600க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

இலங்கைக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய அமெரிக்கா தயாராக உள்ளது” என்று குறிப்பிட்டுள்ளார். பின்னர் தனது டுவிட்டில் இருந்த தவறை உணர்ந்து, உடனே அதை நீக்கம் செய்துள்ளனர்.

இதையடுத்து தனது தவறை திருத்தி 138 பேர் உயிரிழந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையாக மாறி, பல்வேறு விமர்சனங்களுடன் வைரலாகி வருகிறது.

முன்னதாக இலங்கை தாக்குதலுக்கு அந்நாட்டு பிரதமர் ரணில் விக்கரமசிங்கே கண்டனம் தெரிவித்து டுவிட் செய்துள்ளார். அதில் குடிமக்கள் அனைவரும் வலிமையாகவும், ஒன்றிணைந்தும் இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.

இதேபோல் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்நாட்டு அதிபர் மைத்ரிபாலா சிறிசேனா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி