ஆப்நகரம்

இனி துருக்கி பெண் காவலர்கள் ஹிஜாப் அணியலாம்..!

துருக்கி காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் ஹிஜாப் துணி அணிய இருந்த தடையை நீக்கி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.

TNN 28 Aug 2016, 4:33 pm
துருக்கி காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் ஹிஜாப் துணி அணிய இருந்த தடையை நீக்கி அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது.
Samayam Tamil turkey allows female police officers to wear headscarf
இனி துருக்கி பெண் காவலர்கள் ஹிஜாப் அணியலாம்..!

சில காலங்களுக்கு முன்பு துருக்கி காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள்,ஹிஜாப் எனப்படும் துணியை அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.இந்த தடைக்கு அந்நாட்டில் இருந்த சில அமைப்புகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்தன.

இஸ்லாமிய மத வழக்கமான பெண்கள் ஹிஜாப் அணியும் வழக்கத்தை அரசு தடை செய்வது தவறு எனவும் அந்த அமைப்புகள் வலியுறுத்தி வந்தன.இந்நிலையில் பெண் காவலர்கள் ஹிஜாப் அணிய இருந்த தடையை அந்நாட்டு அரசு திடீரென நீக்கியுள்ளது.

பெண் காவலர்கள் தாங்கள் அணியும் காவல்துறை தொப்பியின் கீழ் ஹிஜாப் துணியை அணியலாம் எனவும்,ஹிஜாப் துணிகளில் எந்தவித வேலைப்பாடுகளும் இருக்க கூடாது எனவும் துருக்கி அரசு அறிவித்துள்ளது.

அடுத்த செய்தி