ஆப்நகரம்

புரட்சி எதிரொலி: துருக்கி ராணுவத்தை சீர்செய்ய முடிவு

சமீபத்தில் துருக்கியில் ராணுவப் புரட்சியை அடுத்து, தனது ராணுவத்தை சீர்செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.

TNN 29 Jul 2016, 4:24 am
அங்காரா: சமீபத்தில் துருக்கியில் ராணுவப் புரட்சியை அடுத்து, தனது ராணுவத்தை சீர்செய்ய அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது.
Samayam Tamil turkey planned to stabilise its army
புரட்சி எதிரொலி: துருக்கி ராணுவத்தை சீர்செய்ய முடிவு


துருக்கி நாட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்பு, ராணுவப் புரட்சி ஏற்பட்டது. அப்போது ராணுவத்தினருக்கும், அரசு தரப்பு போலீசாருக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்றது. இதில் சுமார் 365 பேர் கொல்லப்பட்டனர். ஆயிரக்கணக்கானோர் படுகாயமடைந்தனர். அதிபர் தயீப் எர்டோகன் ஓய்வில் இருந்த போது, ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி நடைபெற்றது.

ஆனால் அதிபரின் ஆதரவாளர்களால் இந்த முயற்சி முறியடிக்கப்பட்டது. இதையடுத்து புரட்சியில் ஈடுபட்ட ஆயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். இந்நிலையில் ஆட்சி கவிழ்ப்பு புரட்சியை தொடர்ந்து அந்நாட்டு அரசு, ராணுவம் முழுவதையும் சீர் செய்ய முடிவு செய்துள்ளது. ஆட்சி கவிழ்ப்பில் ஈடுபட்ட தளபதிகள் உட்பட 1,700 அதிகாரிகள் அதிரடியாக நீக்கப்பட்டனர்.

பின்னர் தலைமை ராணுவ கவுன்சில், நேட்டோ படையினர் உயர் அதிகாரிகள் ஆகியோர் ஆலோசனை நடத்தினர். அதில் நீக்கப்பட வேண்டிய அதிகாரிகள் குறித்து முடிவு செய்யப்பட்டது. முன்னதாக, பள்ளிகள், மருத்துவமனைகள் உள்ளிட்டவற்றில் பணிபுரிந்த 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

அடுத்த செய்தி