ஆப்நகரம்

பாகிஸ்தானின் ஆணவக்கொலை செய்யப்பட்ட சகோதரிகள்..!

காதலித்து திருமணம் செய்து கொள்ள இருந்த இரண்டு சகோதரிகள்,உடன்பிறந்த சகோதரனால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

TNN 31 Jul 2016, 2:02 am
காதலித்து திருமணம் செய்து கொள்ள இருந்த இரண்டு சகோதரிகள்,உடன்பிறந்த சகோதரனால் துப்பாக்கியால் சுட்டுக்கொல்லப்பட்டுள்ள சம்பவம் பாகிஸ்தானில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil two sisters shot dead in pakistan honour killings
பாகிஸ்தானின் ஆணவக்கொலை செய்யப்பட்ட சகோதரிகள்..!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தைச் சேர்ந்த 22 வயதான கொசர் மற்றும் 28 வயதான குல்சார் பிபி ஆகியோர் உடன்பிறந்த சகோதரிகள் ஆவர்.இவர்களை இணைவரும் தாங்கள் காதலித்த நபர்களை திருமணம் செய்து கொள்ள இருந்தனர்.ஆனால் தான் தேர்வு செய்துள்ள வேறு இரண்டு நபர்களைத்தான் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அவர்களின் சகோதரன் நாசர் ஹுசைன் என்பவர் வற்புறுத்தி வந்தார்.ஆனால் அவரின் பேச்சை கண்டுகொள்ளாமல் திருமணத்திற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வந்தன.இந்நிலையில் நேற்று தான் வைத்திருந்த துப்பாக்கியால் தனது சகோதரிகளை நாசர் ஹுசைன் சுட்டுக்கொன்றுள்ளார்.

பாகிஸ்தானில் உள்ள மத அடிப்படைவாதிகள் காரணமாக சமீபகாலமாக அந்நாட்டில் ஆணவக்கொலைகள் அதிகரித்து வருகின்றன.இந்த ஆண்டு மட்டும் சுமார் 1000 பேர் பாகிஸ்தானின் ஆணவக்கொலை செய்யப்பட்டிருப்பதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.சமீபத்தில் பாகிஸ்தான் கவர்ச்சி நடிகையான குவாண்டீல் பலோச், தனது சகோதரனால் ஆணவக்கொலை செய்யப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி