ஆப்நகரம்

நிரவ் மோடியை இந்தியா கொண்டுவர இங்கிலாந்து அரசு உதவி

விரைவில் அமலாக்கத்துறை மற்று சிபிஐ அதிகாரிகள் குழு லண்டன் சென்று நிரவ் மோடி மற்றும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் எனக் கூறுப்படுகிறது.

Samayam Tamil 10 Mar 2019, 2:43 am
வங்கி மோசடி பேர்வழி நிரவ் மோடியை இந்தியாவுக்குக் கொண்டுவருவது தொடர்பான வழக்கை இங்கிலாந்து நீதிமன்றத்தில் விசாரிக்க அந்நாட்டு உள்துறை செயலாளர் பரிந்துரைத்துள்ளார்.
Samayam Tamil Nirav-Modi


பஞ்சாப் நேஷனல் வங்கியில் சுமார் 15,000 கோடி ரூபாய் மோசடி செய்தவர் வைர வியாபாரி நிரவ் மோடி. இந்தியாவில் மிகப்பெரிய வங்கி மோசடியாகக் கருதப்படும் இந்த மோசடி அம்பலமானதும் நிரவ் மோடி தலைமறைவாகிவிட்டார்.

அவர் லண்டனில் வசிப்பதாக தகவல் வெளியான நிலையில் சனிக்கிழமை, நிரவ் மோடி லண்டனில் ஜாலியாக சுற்றித்திரியும் வீடியோ வெளியானது. அவர் தன் உருவத்தை மாற்றிக்கொண்ட அறுவை சிகிச்சை செய்துகொண்டிருப்பதாகவும் லண்டனில் உள்ள ஆடம்பர குடியிருப்பு ஒன்றில் வசிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. புதிதாக வைர வியாபாரத்தை நடத்திவருவதாகவும் தகவல்கள் கிடைக்கின்றன.


இச்சூழலில் நிரவ் மோடி சுதந்திரமாக சுற்றித்திரியும் வீடியோ வெளியானதைத் தொடர்ந்து அந்நாட்டு உள்துறை செயலாளரை இந்திய அமலாக்கத்துறை தொடர்பு கொண்டது எனத் தெரிகிறது. அப்போது, உள்துறை செயலாளர் சஜித் ஜாவித் நிரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான வழக்கு வெஸ்ட்மினிஸ்டர் நீதிமன்றத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது என தெரிவித்ததாகவும் அமலாக்கத்துறை வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன.


விரைவில் அமலாக்கத்துறை மற்று சிபிஐ அதிகாரிகள் குழு லண்டன் சென்று நிரவ் மோடி மற்றும் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்துவது தொடர்பான நடவடிக்கையை தீவிரப்படுத்தும் எனக் கூறுப்படுகிறது.

அடுத்த செய்தி