ஆப்நகரம்

Ukraine Plane Crash 2020: 180 பயணிகளின் கதி என்ன ஆனது? பயங்கர விபத்தில் சிக்கிய உக்ரைன் விமானம்!

உக்ரைன் விமானம் ஒன்று ஈரான் நாட்டில் விபத்திற்கு உள்ளானதில் 180 பயணிகள் குறித்த அச்சம் எழுந்துள்ளது.

Samayam Tamil 8 Jan 2020, 11:56 am
உக்ரைன் சர்வதேச ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்கு சொந்தமான ’போயிங் 737’ விமானம் ஈரான் தலைநகர் டெஹ்ரானின் இமாம் கோமெய்னி விமான நிலையத்தில் இருந்து இன்று காலை புறப்பட்டது. அதில் 180 பயணிகள் மற்றும் விமான ஊழியர்கள் பயணித்தனர்.
Samayam Tamil Plane


இந்நிலையில் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டதாக சொல்லப்படுகிறது. இதனால் நிலைதடுமாறி விமான நிலையம் அருகே கீழே விழுந்து நொறுங்கியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவத் தளபதியின் பதவி நீட்டிப்புக்கு பார் கவுன்சில் எதிர்ப்பு

இந்த பயங்கர விபத்தில் பயணிகள் அனைவரும் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

விபத்து நிகழ்ந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. நேற்று மாலை ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது அந்நாட்டு அரசு ஏவுகணைகள் மூலம் தாக்குதல் நடத்தியுள்ளது.

ராணுவ தளபதியின் இறுதி ஊர்வலம் : 35 பேர் பலி

முன்னதாக ஈரானின் மிகவும் சக்தி வாய்ந்த படைத்தளபதி சுலைமானியை வான்வழி தாக்குதல் நடத்தி அமெரிக்கா கொன்றது. இதற்கு பழிவாங்கும் நோக்கில் ஈரான் ஏவுகணை தாக்குதலை நடத்தியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இதுகுறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள அமெரிக்க அதிபர் டிரம்ப், எல்லாம் நன்றாகத் தான் நடந்து கொண்டிருக்கிறது. ஈராக்கில் உள்ள எங்கள் நாட்டில் இரண்டு ராணுவ தளங்கள் மீது அந்நாட்டு அரசு ஏவுகணை தாக்குதல் நடத்தியிருக்கிறது.

சேத விவரங்கள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. உலகிலேயே நாங்கள் தான் மிகவும் சக்தி வாய்ந்த ஆற்றல் மிக்க ராணுவ பலத்தை பெற்றுள்ளோம். இந்த விவகாரம் குறித்து விரைவில் அறிக்கை வெளியிடுவோம் என்று குறிப்பிட்டுள்ளார்.

மிஸ்டர் ட்ரம்ப் ‘290’ ஞாபகம் இருக்கா? அமெரிக்காவுக்கு ஈரான் மிரட்டல்

இந்த சூழலில் ஈரான் நாட்டில் விமானம் ஒன்று விபத்தில் சிக்கியது பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் நிஜமாகவே தொழில்நுட்ப கோளாறு தான் ஏற்பட்டதா? இல்லை யாரேனும் தாக்குதல் நடத்தி விமானத்தை வீழ்த்தி இருக்கிறார்களா என்று கேள்வி எழுந்துள்ளது. இதனால் ஈரானில் பதற்றம் மேலும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில் போயிங் 737 விமானத்தில் பயணம் செய்த பயணிகள் உட்பட அனைவரும் பலியானதாக தகவல் வெளியாகியுள்ளது. இது அந்நாட்டில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

அடுத்த செய்தி