ஆப்நகரம்

அடடே... இந்தியாவுக்கு 34 கோடி டாலர் வழங்கும் அமெரிக்கா!

இந்தியாவுக்கு 34 கோடி டாலர் மதிப்புள்ள கடன்களையும், முதலீட்டையும் வழங்க அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

Samayam Tamil 5 Jun 2020, 10:52 pm
ஆப்ரிக்கா, லத்தீன் அமெரிக்கா, இந்தோ-பசிபிக் மற்றும் வளர்ந்து வரும் சந்தைகளில் வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக 100 கோடி டாலர் முதலீடுகளுக்கு அமெரிக்க சர்வதேச மேம்பாட்டு நிதிக் கழகம் ஒப்புதல் அளித்திருந்தது. இதில் ஒரு பகுதியாக 34 கோடி டாலர் கடன்களாகவும், முதலீடாகவும் இந்தியாவுக்கு வருகிறது. இதற்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது
Samayam Tamil மோடியுடன் ட்ரம்ப்


கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு ஆதரவளிக்க இத்திட்டம் பெரிதும் உதவியாக இருக்கும் என அமெரிக்க தூதரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ராஜஸ்தான் மாநிலத்தில் 300 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி ஆலையை அமைக்க ரெனீவ் பவர் நிறுவனத்திற்கு 14 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இத்திட்டம் இந்தியாவின் மின்சக்தி பாதுகாப்பை உறுதிசெய்ய உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

ராஜஸ்தான் மாநிலத்தில் 100 மெகாவாட் சோலார் மின் உற்பத்தி ஆலை அமைக்க சித்தாரா சோலார் எனர்ஜி நிறுவனத்துக்கு 5 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நீர், சுகாதாரம், உணவு, மகளிர் மேம்பாடு உள்ளிட்ட துறைகளை சேர்ந்த நிறுவனங்களுக்கு நார்தர்ன் ஆர்க் கேபிடல் என்ற நிறுவனம் கடன்களை வழங்கி வருகிறது. இந்நிறுவனத்துக்கு 5 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

பாரியாப்ட் சோலார் எனர்ஜி நிறுவனத்துக்கு 2.73 கோடி டாலர் கடன் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர் கடன் திட்ட விரிவாக்கம், கல்வி மேம்பாட்டுக்காக வோர்ல்ட் பிசினஸ் கேபிடல் நிறுவனத்துக்கு 1.46 கோடி டாலர் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. ஃப்ரஷ் டூ ஹோம் நிறுவனத்துக்கு 2 கோடி டாலர் ஈக்விட்டியாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

தெற்காசிய வளர்ச்சி நிதிக்கு 3 கோடி டாலர் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மின்சக்தி, நீர், உணவு துறைகள் சார்ந்த நிறுவனங்களுக்கு ஆதரவு கிடைக்கும். மேலும், ஸ்டெல்ஆப்ஸ் டெக்னாலஜீஸ் நிறுவனத்திற்கு 27 லட்சம் டாலர் கடன், மில்க் மந்த்ரா நிறுவனத்துக்கு 1 கோடி டாலர் கடன் வழங்கவும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி