ஆப்நகரம்

உலகின் மிக மூத்த மனிதர் மரணம் - வயசு தெரிஞ்சா ஷாக் ஆகிடுவிங்க!

உலகின் மூத்த மனிதராக கருதப்படும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த ஃப்ரெடீ ப்ளோம் உயிரிழந்துவிட்டதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Samayam Tamil 23 Aug 2020, 6:16 pm

உலகின் மிக மூத்த மனிதராக கருதப்படும் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த 116 வயதுடைய நபர் மரணித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil ஃப்ரெடி ப்ளோம்


தென்னாப்பிரிக்கா நாட்டை சேர்ந்தவர் ஃப்ரெடீ ப்ளோம். இவர் 1904ஆம் ஆண்டு மே 8ஆம் தேதியன்று பிறந்தவர். தற்போது உலகை ஆட்டிப்படைக்கும் கோவிட்-19 கொள்ளை நோயை போலவே, முந்தைய காலத்தில் உலகையே ஆட்டிப்படைத்த ஸ்பானிஷ் ஃப்ளூ கொள்ளை நோயால் ஃப்ரெடீ ப்ளோமின் குடும்பத்தினர் ஒட்டுமொத்தமாக உயிரிழந்துவிட்டனர். அதிர்ஷ்டவசமாக ஃப்ரெடீ ஸ்பானிஷ் ஃப்ளூ கொள்ளை நோயிடமிருந்து தப்பிவிட்டார்.

உலக புகைப்பட தினம்: போரை நிறுத்திய ஒரு போட்டோவின் கதை

அதன்பின் ஃப்ரெடீக்கு திருமணம் ஆகி மூன்று குழந்தைகள் பிறந்தன. இவருக்கு மொத்தம் ஐந்து பேரக்குழந்தைகள். கடவுளின் ஆசிர்வதத்தால் தான் இத்தனை ஆண்டுகள் உயிரோடு வாழ்வதாக அண்மையில் ஃப்ரெடீ தெரிவித்திருந்தார். இந்நிலையில் ஃப்ரெடீ ப்ளோம் உயிரிழந்துவிட்டதாக அவரது குடும்பத்தினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

கின்னஸ் புத்தகத்தின்படி தற்போது உலகின் மிக மூத்த மனிதராக பிரிட்டொன் பாப் வெய்ட்டன் என்பவர் அங்கீகரிக்கப்பட்டுள்ளார். ஆனால் இவரின் வயது 112 மட்டுமே. எனினும், 116 வயதான ஃப்ரெடீ ப்ளோமே உலகின் மிக மூத்த மனிதராக கருதப்படுகிறார். இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இரண்டு வாரங்களுக்கு முன் ஃப்ரெடீ மரம் வெட்டிக்கொண்டு இருந்ததாக அவரது குடும்பத்தினர் சொல்கின்றனர்.

கடந்த மூன்று நாட்களாக திடீரென ஃப்ரெடீயின் உடல்நிலை குன்றியதாக கூறப்படுகிறது. தென்னாப்பிரிக்க தலைநகர் கேப் டவுனில் உள்ள டைகர்பெர்க் மருத்துவமனையில் ஃப்ரெடீயின் உயிர் பிரிந்தது. அவருக்கு இயற்கை மரணம் ஏற்பட்டுள்ளதாகவும், கொரோனாவால் அவர் உயிரிழக்கவில்லை எனவும் குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

அடுத்த செய்தி