ஆப்நகரம்

சிரியா மீது தாக்குதல் தொடுத்த துருக்கி; கோபத்தில் வெடித்த அமெரிக்கா!

துருக்கியின் நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

Samayam Tamil 23 Jan 2018, 9:02 am
அங்காரா: துருக்கியின் நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
Samayam Tamil us condemns turkeys action against syria
சிரியா மீது தாக்குதல் தொடுத்த துருக்கி; கோபத்தில் வெடித்த அமெரிக்கா!


சிரியாவின் வடக்குப்பகுதி குர்து இன மக்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவர்கள் மக்கள் பாதுகாப்பு குழுக்கள்(ஒய்.பி.ஜி) என்ற பெயரில் குர்து ராணுவப் படை வைத்துள்ளனர்.

இதற்கு அமெரிக்கா ஆதரவு அளித்து வருகிறது. துருக்கி நாட்டின் கிழக்கு, தென் கிழக்கு பகுதிகளில் குர்து இன மக்கள் பெரும்பான்மையாக வசித்து வருகின்றனர்.

அங்கு செயல்படும் தீவிரவாத குழுக்களுக்கு சிரியாவின் ஒய்.பி.ஜி ராணுவம் ஆதரவளித்து வருவதாக துருக்கி குற்றம்சாட்டி வருகிறது.

இந்நிலையில் சிரியாவின் வடக்குப் பகுதியில் தரை மற்றும் வான் வழித் தாக்குதல்களை துருக்கி நடத்தியுள்ளது. இதில் ஏராளமானோர் பலியானதாக கூறப்படுகிறது.

துருக்கியின் தாக்குதல் நடவடிக்கைக்கு அமெரிக்கா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. சிரியாவில் ஐ.எஸ் அமைப்பினருக்கு எதிராக போர் நடைபெற்று வருகிறது.

இதில் ஒய்.பி.ஜி ராணுவமும் இணைந்து செயல்படுகிறது. எனவே இப்படையை குறிவைத்து தாக்குதல் நடத்துவது தீவிரவாதத்துக்கு எதிரான போரை பலவீனப்படுத்தும் என்று குற்றம்சாட்டியுள்ளது.

US condemns Turkey's action against Syria.

அடுத்த செய்தி